ஜெனனி ஜோதிட மையம்
அஸ்ட்ரோ ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
வாழ்க வளத்துடன்
9444663519

காக்கை

தினமும் உலர்திராட்சை ஒருகைப்பிடி அளவுக்கு காலையில் காகத்திற்கு அளிக்க வேண்டும்

உயிரே போக வேண்டும் என்று விதி இருந்தாலும் அதையே மாற்றக் கூடிய சக்தி இதற்கு உண்டு

இதை தவிர நாம் வன்னி மர விநாயகருக்கு பச்சரிசி மாவு படைத்தாலும்

சனிக்கிழமைகளில் விரதம் இருந்தபடி எள் கலந்த தயிர்சாதம் படைத்தாலும்

ஒரு மிகப் பெரிய கவசம் போல் நம்மை பாதுகாக்கும்

நமது வாழ்வில் திடீரென்று நடக்கும் அசம்பாவிதங்கள்,
விபத்துக்கள்,
வீண் பழி
போன்றவை நம்ம கிட்டவே நெருங்காது.. செய்வினை கோளாறுகள் நம்ம பக்கமே வராது.

தீராத கடன்
தொல்லைகள்
புத்திர சந்தான பாக்கியம்
போன்ற
மிக முக்கியமான பலன்களையும்,
நமது நியாயமான அபிலாஷைகளையும் தங்கு தடையின்றி நிறைவேற்றுவதில்
மிக முக்கிய பங்கு வகிப்பது
அற்புதமான
ஜீவ ராசி – காக்கை இனம்

குடும்ப ஒற்றுமை வேண்டும்
என்று நினைக்கும் சுமங்கலி பெண்கள் காக்கைகளை வழிபடுவது வழக்கம்.

தன் குடும்பம் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க,
தங்களிடம் பாசம் உள்ளவர்களாகத் திகழ

காணுப்பிடி பூஜையைச் செய்கிறார்கள்.

திறந்த வெளியில் தரையைத் தூய்மையாக மெழுகிக் கோலமிடுவார்கள்.

,அங்கே வாழை இலையைப் பரப்பி அதில் வண்ண வண்ண சித்ரான்னங்களை
ஐந்து,
ஏழு,
ஒன்பது
என்ற கணக்கில் கைப்பிடி அளவு எடுத்து வைத்து,
காக்கைகளை
“கா…கா…’
என்று
குரல் கொடுத்து அழைப்பார்கள்.

அவர்களின் அழைப்பினை ஏற்று காக்கைகளும்
பறந்து வரும்.
அங்கு வந்த
காக்கைகள் தன் சகாக்களையும் அழைக்கும்.

வாழை இலையில் உள்ள அன்னங்களைச் சுவைக்கும்.

அப்படிச் சுவைக்கும் போது அந்தக் காக்கைகள்
“கா…கா…’
என்று கூவி
தன் கூட்டத்தினரை அடிக்கடி அழைக்கும்.

அந்தக் காக்கைகள் உணவினைச் சாப்பிட்டுச் சென்றதும், அந்த வாழை இலையில் பொரி,
பொட்டுக்கடலை,
வாழைப்பழங்கள்,
வெற்றிலைப் பாக்கு
வைத்து தேங்காய் உடைத்து வழிபடுவார்கள்.

இதனால் குடும்ப ஒற்றுமை நிலவும் என்பது தமிழர்களின் நம்பிக்கை.

மேலும் காக்கைகளை அன்று வழிபடுவதால் சனி பகவானைத் திருப்திப்படுத்தியதாகவும்
கருதுகிறார்கள்.

காக்கை சனி பகவானின் வாகனம்.
காக்கைக்கு உணவு அளிப்பது சனிக்கு மகிழ்ச்சி தருமாம்.

காக்கைகளில்
நூபூரம்
பரிமளம் மணிக்காக்கை அண்டங்காக்கை
என சில வகைகள் உண்டு.

காக்கையிடம் உள்ள தந்திரம் வேறு எந்தப் பறவைகளிடமும் காண முடியாது.

எமதர்மராஜன் காக்கை வடிவம் எடுத்து மனிதர்கள் வாழுமிடம் சென்று அவர்களின் நிலையை அறிவாராம்.

அதனால் காக்கைக்கு உணவு அளித்தால் எமன் மகிழ்வாராம்.

எமனும் சனியும் சகோதரர்கள் ஆவர். அதனால்,
காக்கைக்கு உணவிடுவதால்
ஒரே சமயத்தில்
எமனும் சனியும்
திருப்தியடைவதாகக் கருதப்படுகிறது.

தந்திரமான குணம் கொண்ட காக்கை
காலையில் நாம் எழுவதற்கு முன்,
காக்கையின் சத்தம் கேட்டால் நினைத்த காரியம் வெற்றி பெறும்.

நமக்கு அருகில் அல்லது வீட்டின் வாசலை நோக்கிக் கரைந்தால் நல்ல பலன் உண்டு.

வீடு தேடி காகங்கள் வந்து கரைந்தால் அதற்கு உடனே உணவிடவேண்டும்.

எனவே, காக்கைக்கு உணவு அளித்து வழிபாடு செய்வதால் சனிபகவான்,எமன் ஆசீர்வாதத்தினைப் பெற்று மகிழ்வுடன் வாழலாம்.

ஜெனனி ஜோதிட மையம்
அஸ்ட்ரோ ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
வாழ்க வளத்துடன்
9444663519

Related Posts