விதி மதி கதி
ஜெனனி ஜோதிட மையம்
அஸ்ட்ரோ ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
வாழ்க வளத்துடன்
9444663519
ஏழாமிடம் (களத்திரஸ்தானம்)
மற்றும் எட்டாமிடம் (மாங்கல்யஸ்தானம்)
போன்ற இடங்களையும் மற்றும்
களத்திர காரகனான சுக்கிரனின் நிலையையும் நல்ல திறம் வாய்ந்த சோதிட நுணுக்கங்களோடு ஆராயவேண்டும்.
ஓருவரது சாதகத்தில் விதி கெட்டால் மதி மதியும் கெட்டால் கதி என்பார்கள்.
விதி என்பது லக்கனம்
மதி என்பது ராசி
கதி என்பது சூரியன்
இம்மூன்று வகையில் மேற்கண்ட ஸ்தானங்களை ஆய்வு செய்து பார்க்கும்போது மூன்று பரிமாணங்களிலும் பாதிக்கப்பட்டு இருந்தால் அவை பலவீனமான சாதகம் ஆகும்.
எனவே இவ்வகையான சாதகங்களுக்கு ஏற்றார்போல ஜோடி சேர்க்கும்போது பொருத்தம் பார்க்கும் போது அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு உருவாகாமல் இருக்க வாய்ப்பு உருவாகிறது.
லக்கன அடிப்படையில் மேற்கண்ட ஸ்தானங்கள் பாதிக்கப்பட்டு இருந்தாலும்
ராசி அடிப்படையில் பாதிக்கப்பட்டு இருப்பின் அதற்கு தகுந்தாற்போல பொருத்தம் போடும்போது அவர்களது இல்வாழ்க்கையில் எவ்வித பாதிப்பும் இல்லாமல் பொருத்தம் பார்க்க வேண்டும்
மேற்கண்ட ஸ்தானங்கள் எவ்வாறு இருந்தால் பாதிக்கப்பட்டிருக்கும் என பார்ப்போம்.
(லக்கனம், இரன்டு,ஏழு,எட்டு மற்றும் சுக்கிரன்)
1) மேற்கண்ட ஸ்தானங்கள் நீசம், பகை,வக்கிரம் மற்றும் அஸ்தமனம் ஆகியவை பெறக்கூடாது
2) மேற்கண்ட ஸ்தானங்கள் மறைவிடங்களான ஆறு,எட்டு அதிபதிகள் தொடர்பின்றியோ அல்லது இவ்வதிபதிகள் மறைவிடங்கள் செல்வதோ கூடாது.
3) மேற்கண்ட ஸ்தான மற்றும் கிரகங்கள் உடன் பாவிகளான ராகு,கேது,சனி மற்றும் செவ்வாய் சேர்க்கையோ அல்லது பார்வையோ கூடாது
புத்திரதோஷம் இவை மட்டுமன்றி தம்பதிகள் இருவருக்கும் புத்திரதோஷம் இருக்ககூடாது.
ஏனைய செவ்வாய், களத்திர,மாங்கல்ய தோஷங்களுக்கு தோஷம் உள்ளவர்களுக்கு அதே மாதிரி தோஷம் உடையவர்களை ஜோடி சேர்க்கவேண்டும்
ஆனால் புத்திரதோஷம் உடையவர்களுக்கு அதே மாதிரி தோஷம் உடையவர்களை இணைக்கும்போது புத்திரபாக்கியம் உருவாவதில் சிக்கல் உருவாகிவிடுகிறது.
புத்திரதோஷம் என்பது மூன்று வகையில் தோஷங்களை தருகிறது
1) புத்திரமே உருவாகாத நிலை
2) ஆண் குழந்தையின்றி பெண்குழந்தை மட்டும் உருவாகும் நிலை
3) புத்திரர்கள் உருவாகி இருந்தாலும் அவர்களால் பயனற்ற நிலை இதுபோன்ற மூன்று நிலைகளில் பாதிப்பு தருகிறது.
இதில் முதல் இரன்டு நிலை மட்டுமே திருமணவாழ்வில் பாதிப்பு உருவாக வாய்ப்பு உருவாகி விடுகிறது
இதற்கு தம்பதிகளது சாதக கட்டத்தில் புத்திரஸ்தானமான ஐந்தாமிடம் மற்றும் புத்திரகாரகனான குருபகவான் ஆகியவற்றின் நிலைகளை விதி, மதி மற்றும் கதி என முப்பரிமாணங்களில் ஆய்வு மேற்கொள்ளப்படவேண்டும்
இம்மூன்று வகையிலும் தம்பதிகள் இருவருக்கும் புத்திரதோஷம் இருப்பின் அவர்களை திருமண பந்தத்தில் இணைக்காமல் இருத்தல் நல்லது.
ஜெனனி ஜோதிட மையம்
அஸ்ட்ரோ ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
வாழ்க வளத்துடன்
9444663519
புத்திரதோஷம் உருவாக
1)புத்திரஸ்தானம்====புத்திரகாரகனான குருபகவான் நீசம்,பகை,வக்கிரம் ,அஸ்தமனம் பெறக்கூடாது
2) புத்திர ஸ்தானம் மற்றும் குரு பகவான் உடன் அரவுகளான ராகு. கேது சேர்க்கை கூடாது.
3)ஐந்தாமாதிபதி மற்றும் குருபகவான் அரவுகளான ராகு,கேது நட்சத்திர சாரம் பெறக்கூடாது
4)புத்திரஸ்தானாதிபதி,குருபகவான் ஆகிய இரு கிரகங்களுடன் ஆறு,எட்டு ஆம் அதிபதிகளோடு சம்பந்தமோ அல்லது ஆறு மற்றும் எட்டாமிடம் சேர்வதோ நல்லதல்ல.இதுபோல அமைப்புகள் தம்பதிகள் இருவருக்கும் அமையும் பட்சத்தில் விவாக பொருத்தம் போடக்கூடாது
ஜெனனி ஜோதிட மையம்
அஸ்ட்ரோ ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
வாழ்க வளத்துடன்
9444663519
இவை மட்டுமல்லாமல் தம்பதிகள் இருவரது சாதகத்திலும் களத்திர ஸ்தானத்திற்கு சனி,செவ்வாய் சேர்க்கையோ அல்லது பார்வையோ கூடாது.
இதேபோல
3,4,5,7,12 ஆம் இடங்களில சுபர் பார்வையற்ற
சுக்கிரன்+செவ்வாய்
சனி+ராகு
சுக்கிரன்=>சனி.செவ்வாய்
மற்றும்
சுக்கிரன் உடன் ராகு சேர்க்கை
மற்றும் சந்திரன்+சுக்கிரன்
சேர்க்கை போன்ற அமைப்பை பெற்றவர்கள் சாதகங்களை இணைக்கும்போது நன்கு ஆய்வு செய்து பொருத்தம் பார்த்தல் வேண்டும்.
எல்லாவற்றிற்கும் மேலாக தம்பதிகளை இணைக்கும்போது நட்சத்திர பொருத்தங்களை மட்டும் பார்த்து பொருத்தம் போடாமல்
கட்ட அடிப்படையிலான பொருத்தங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டும்.
ஜெனனி ஜோதிட மையம்
அஸ்ட்ரோ ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
வாழ்க வளத்துடன்
9444663519