ஜெனனி ஜோதிட மையம்
அஸ்ட்ரோ ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
9444663519

ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி வழிபாடு

இவ்விழாவானது ஆண்டுக்கு ஒரு முறை ஆவணி மாதத்தில் வளர்பிறை சதுர்த்தி நாள் அன்று கொண்டாடப்படுகிறது

பிள்ளையார் வழிபாடு மிகவும் எளிமையானது.

பிள்ளையார் நாம் பிடிக்கும் எந்த பொருள்களிலும் வந்து இருந்து அருள் புரிவார்

எந்த ஒரு செயலை தொடங்கினாலும் ஸ்ரீ விநாயக பெருமானை துதித்து அச்செயலை ஆரம்பித்தால் சுபமாக முடியும் என்பது நிதர்சனமான உண்மையாகும்.

சகல சங்கடங்கள் அனைத்தையும் தீர்க்க/நீக்க கூடிய சங்கட ஹர சதுர்த்தி திதி நாள் ஒவ்வொரு மாதமும் தவறாமல் விரதம் இருந்து

வலம்புரி விநாயக பெருமானை வழிபட்டால் தீராத வினை எல்லாம் தீரும் என்பது ஐதீகம்.

நவகிரகங்கள் ஸ்ரீ விநாயக பெருமானின் உடலில் ஒவ்வொரு பாகத்திலும் இடம் பெற்று உள்ளன

ஜெனனி ஜோதிட மையம்
அஸ்ட்ரோ ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
9444663519

சங்கட ஹர சதுர்த்தி திதியை தவறாமல் கடைப்பிடிப்பவருக்கு நவக்கிரகங்கள் இம்சிப்பதில்லை.

ஸ்ரீ விநாயகரை வணங்குவதற்கு ஏற்ற நாட்கள் :

ஸ்ரீ விநாயக பெருமானை தினமும் எந்த நேரத்திலும் வணங்கலாம்.

அவரை சில குறிப்பிட்ட நாட்களில்
அதாவது
சதுர்த்தி திதி
வெள்ளி
செவ்வாய்,
மார்கழி வளர்பிறை சஷ்டி திதி
நாட்களில் விநாயகரை வணங்குவதன் மூலம் அவரின் முழு அன்பை பெறலாம் என்று தமிழகத்தில் உள்ள விநாயகர் கோயில்களில் வழிபாடு நடைபெறுகிறது

நம் மனதிற்கு பிடித்த வாழ்வு அமைய
எப்படி வணங்குவது

தோப்புக்கரணம் போட்டும்,
தலையில் குட்டி கொண்டும்,
சிதறு தேங்காய் உடைத்தும்,
பிள்ளையாரை வணங்க வேண்டும் என்று விநாயகர் புராணம் கூறுகிறது.

ஜெனனி ஜோதிட மையம்
அஸ்ட்ரோ ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
9444663519

வழிபாடும் முறைகள்
நமது தேவை என்ன என்று அறிந்து அதற்கு ஏற்றவாறு விநாயகரை வழிபட வேண்டும் என்று தமிழக பரம்பரையில் ஜோதிட வல்லுநர்கள் கூறி உள்ளார்கள்.

திருமண தடை நீங்க

வன்னி மரத்தடியில் வீற்றிருக்கும் விநாயகரை அவிட்டம் நட்சத்திரத்தன்று நெல் பொரியால் அர்ச்சனை செய்து,அபிஷேகம் செய்து வணங்குவதுடன்,

பிரம்ம முகூர்த்தம் அன்று நடக்கும் ஏழைப்பெண்ணுக்கு இரு மாலைகள், மாப்பிள்ளைக்கு இரு மாலைகளும் தானம் செய்தால் திருமண தடை நீங்கி நல்வாழ்க்கை அமையும்.

தொழிலில் லாபம் கிட்டுவதற்கு

அவிட்டம் நட்சத்திரம் அன்று வன்னி மரத்தடியில் வீற்றிருக்கும் விநாயகருக்கு பொரியை நைவேத்தியம் படைத்து ஆதவரற்ற குழந்தைகளுக்கு ஆடை உணவு கொடுத்து உதவி வந்தால் தொழிலில் நல்ல இலாபம் அடையலாம்.

விவசாயம் தழைக்க
செழிப்பான வாழ்க்கை வாழ
செய்வினை விலக
மேற்கு நோக்கி உள்ள அரசமரத்தடியில் அமர்ந்திருக்கும் பிள்ளையாருக்கு பூசம் நட்சத்திரம் அன்று அன்னாபிஷேகம் செய்து ,முடிந்த பேருக்கு அன்னம் தானம் செய்து வழிபட்டால் விவசாய விளைச்சல் பெருகும்.பண கஷ்டம் தீரும்.செய்வினை விலகி செழிப்பான வாழ்க்கை அமையும்.

ஜெனனி ஜோதிட மையம்
அஸ்ட்ரோ ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
9444663519

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்

முழுமுதற் கடவுளான விநாயகரின் முக்கியமான விழா விநாயகர் சதுர்த்தி ஆகும்

இந்த ஆண்டு ஆவணி மாதம் 15ஆம் தேதி ஆகஸ்ட் 31ஆம் தேதி (புதன்கிழமை) கொண்டாடப்பட உள்ளது

விநாயகர் சதுர்த்தியன்று விநாயகருக்கு என்னென்ன உணவு பொருட்களை நிவேதனம் செய்யலாம் என்பதை பார்க்கலாம்

விநாயகருக்கு படைக்கும் பொருட்களில் கூட அர்த்தம் இருக்கிறது
அப்பம்
கொழுக்கட்டை
மோதகம்
அவல்
பொரி
சர்க்கரைப் பொங்கல்
சுண்டல்
கொய்யாப்பழம்
விளாம்பழம்
வாழைப்பழம்
போன்றவற்றை விநாயகருக்கு படைத்து வழிபட வேண்டும்

அவருக்கு பிடித்த இலைகள்
அருகம்புல்
வன்னி இலை
வில்வ இலை

பிடித்த மலர்கள்
தும்பைப்பூ
மல்லிகைப்பூ
செண்பகப்பூ
செம்பருத்திப்பூ
எருக்கம்பூ
இவற்றில் ஏதாவது ஒன்றை விநாயகருக்கு சூட்டி வழிபடலாம்

ஜெனனி ஜோதிட மையம்
அஸ்ட்ரோ ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
9444663519

விநாயகர் சதுர்த்தி நாளில், பிள்ளையாருக்கு செய்யப்படும் பிரசாதங்களில் முக்கியமானது, மோதகம்
மற்றும்
கொழுக்கட்டை
தேங்காய்
வெல்லப்பாகு

அரிசி மாவால் செய்யப்படும் இந்த நிவேதன பொருளில் ஒரு உண்மை உள்ளது

மோதும் அகங்கள் இருக்கக்கூடாது. எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்ற தத்துவத்தை வலியுறுத்திதான் மோதகத்தை படைக்கின்றோம்

விநாயகருக்கு கொழுக்கட்டை படைப்பது ஏன்

மேல் தோலாக இருக்கும் மாவு பொருள், அண்டம்
அதன் உள்ளே இருக்கும் பூரணம், பிரம்மம் . நமக்குள் இருக்கும் பூரணம் போன்ற நல்ல பண்புகளை மூடி மறைப்பது

மாயை. இந்த மாயை-யை அகற்றிவிட்டால், பூர்ணத்துவமான நல்ல பண்புகள் வெளியாகும்
இதுவே, கொழுக்கட்டை உணர்த்தும் தத்துவம்

கொழுக்கட்டையின் கூர்மையான முன் பகுதி, விநாயகர் கூரிய புத்தியை அருள்வார்
என்பதை தெரிவிக்கிறது.

கொழுக்கட்டையின் வெள்ளை நிற வெளிப்பகுதி, எல்லோருக்கும் தெளிவான உள்ளம் தருவார் என்பதை தெரிவிக்கிறது

கொழுக்கட்டையின் உட்புறத்தில் இனிப்பான பகுதியோ, கணபதி எப்போதும் இனிய அருள் வழங்குவார் என்பதை சொல்லாமல் சொல்கிறது

விநாயகருக்கு பிடித்த கொழுக்கட்டையை படைத்து விநாயகரின் அருளைப் பெறுவோம்

ஜெனனி ஜோதிட மையம்
அஸ்ட்ரோ ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
9444663519

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்

வீட்டில் விநாயகர் சதுர்த்தி நாளில் விநாயகரை நம் வீட்டில் எத்திசையில் வைக்க வேண்டும்

இடப்பக்கம்

இந்நாளில் விநாயகருடன் சேர்த்து தேவியையும் பலரும் வைப்பார்கள். விநாயகரின் தும்பிக்கை தேவியை நோக்கி இடது பக்கமாக இருக்குமாறு பார்த்து வைக்கவேண்டும்

ஜெனனி ஜோதிட மையம்
அஸ்ட்ரோ ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
9444663519

பின்புறம்

விநாயகரின் சிலையின் பின்புறம் வீட்டில் உள்ள எந்தவொரு அறையையும் பார்த்தவாறு இருக்கக்கூடாது

விநாயகர் வளமையை தரும் கடவுளாகும்

விநாயகரின் முன்புறம் லெட்சும் வாசம் செய்வாள்

பின்புறம் வறுமையை குறிக்கும்

அதனால் தான்
விநாயகரின் பின்புறம் வீட்டிற்கு வெளிப்பக்கம் பார்த்தவாறு இருக்க வேண்டும்

ஜெனனி ஜோதிட மையம்
அஸ்ட்ரோ ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
9444663519

தென் திசை

தென்புற திசையில் விநாயகர் சிலையை வைக்கக்கூடாது

வீட்டின் கிழக்கு அல்லது மேற்கு திசைகளில் தான் விநாயகர் சிலையை வைக்க வேண்டும்

வீட்டின் பூஜையறையும் கூட தெற்கு திசையில் இருக்கக்கூடாது

கழிவறை

கழிவறையுடன் இணைக்கப்பட்டுள்ள சுவற்றை நோக்கியும் விநாயகர் சிலையை வைக்கக்கூடாது

ஜெனனி ஜோதிட மையம்
அஸ்ட்ரோ ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
9444663519

உலோகம்

விநாயகர் சிலை உலோகத்தில் செய்திருந்தால்
வட கிழக்கு
அல்லது
தென்மேற்கு திசையில் வைக்க வேண்டும்

ஜெனனி ஜோதிட மையம்
அஸ்ட்ரோ ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
9444663519

மாடிப்படி

மாடிப்படி இருக்கும் வீட்டில், கண்டிப்பாக மாடிப்படிக்கு அடியில் விநாயகர் சிலையை வைக்கக்கூடாது
இது வீட்டிற்கு துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும்

ஜெனனி ஜோதிட மையம்
அஸ்ட்ரோ ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
9444663519

ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி திதி வழிபாடு

பிள்ளையாருக்கு என்னென்ன இலைகளைக் கொண்டு அர்ச்சனை செய்தால் நமக்கு கிடைக்கும் பலன்கள்

(01) அரசன் இலை -எதிரிகள் அழிவார்கள்

(02) மருத இலை -மகப்பேறு

(03) அகத்தி இலை – துயரங்கள் நீங்கும்

(04) வில்வம் இலை – இன்பங்கள் பெருகும்

(05) மாதுளை இலை – நல்ல புகழை அடையலாம்

(06) கண்டங்கத்தரி இலை -லட்சுமி கடாட்சம்

(07) வெள்ளெருக்கு இலை -சகலமும் கிடைக்கும்

(08) அரளி இலை – அனைவரும் அன்போடு இருப்பார்கள்

(09) எருக்கம் இலை -குழந்தை பேறு

ஜெனனி ஜோதிட மையம்
அஸ்ட்ரோ ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
9444663519

ஸ்ரீ விநாயக பெருமானுக்கு அபிஷேகம் செய்ய மிகவும் உகந்த பொருட்கள்

(01)தேன்
(02)கரும்பு சாறு
(03)பழ ரசங்கள்
(04) இளநீர்
(05)சந்தனம்
(06)ஜவ்வாது
(07)சந்தனாதித் தைலம்
(08)மாப்பொடி
(09) மஞ்சள் பொடி
(10),திரவிய பொடி
(11)பஞ்ச கவ்ய
(12)இரஸ பஞ்சாமிர்தம்
(13),பழ பஞ்சாமிர்தம்
(14)நெய்
(15) பால்.

இவைகளால்
ஸ்ரீ விநாயகரை அபிஷேகம் செய்து மகிழ்வித்தால் அவர் நம்மை மகிழ்விப்பார்.

ஜெனனி ஜோதிட மையம்
அஸ்ட்ரோ ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
9444663519

ஸ்ரீ விநாயக பெருமானுக்கு மிகவும் பிடித்த உணவு வகைகள்

அவல்
இளநீர்
எள் உருண்டை
கரும்பு
கடலை
கற்கண்டு
சர்க்கரைப் பொங்கல்
தயிர்
தினை மாவு
தேங்காய்
தேன்
நாவல் பழம்
விளாம் பழம்
வெண் பொங்கல்
நெய்
வாழைப்பழம்
இலட்டு
வடை
மோதகம்
மாதுளம் பழம்
புளியோதரை
மிளகு சாதம்
பொரி
புட்டு
பணியாரம்
பசுவின் பால்
(பாக்கெட் பால் ஆகாது)

இவைகளை படைத்து பிள்ளையாரின் அருள் பெறலாம் என்று விநாயக புராணம் கூறுகிறது.

ஜெனனி ஜோதிட மையம்
அஸ்ட்ரோ ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
9444663519

திருமணப்பேற்றை அளிக்கும் தர்மமிகு சென்னையில் பிள்ளையார் தலம்

சென்னை அருகே பல்லாவரம் அருகில் திருநீர் மலை அடிவாரத்தில் உள்ள தூம கேது விநாயகர் ஆலயத்தில் தான் முதன்முதலில் கணபதிக்கு கல்யாண வைபோக விழா நடந்த இடம் என்பதால்
வெள்ளி
சனி
ஞாயிறு
திங்கள்
செவ்வாய்
போன்ற கிழமைகளில் கணபதியை சந்தனம் அபிஷேகம் செய்து வணங்கினால் திருமணப்பேறு நிச்சயம் கிடைக்கும்

ஜெனனி ஜோதிட மையம்
அஸ்ட்ரோ ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
9444663519

பிள்ளையார் வசிக்கும் பஞ்ச பூத மரங்கள்

ஆலமரம்(மண் பூதம் )

நெல்லி மரம்(நீர் பூதம்)

வன்னி மரம் (அக்னி பூதம்)

வாத நாராயண மரம்(வாயு)

அரச மரம்(ஆகாயம்)

இந்த ஐந்து விருட்சங்களின் கீழ் அமர்ந்துள்ள பிள்ளையாரை வணங்கினால் நாம் நினைத்த காரியங்கள் கை கூடும்

பில்லி,சூனியம்,ஏவல்,தீய சக்திகள் விலக

அரசும்
வேம்பும்
பின்னிய படி உள்ள மரத்தடியில் உள்ள பிள்ளையாருக்கு எருக்கம் பூ மாலை கொண்டு பூஜிப்பதால் தீய சக்தி ஆதிக்கத்திலிருந்து தப்பிக்கலாம்

ஜெனனி ஜோதிட மையம்
அஸ்ட்ரோ ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
9444663519

ஸ்ரீ விநாயக பெருமானை வழிபட தேவையான மலர்கள்

மாம்பூ
செண்பகம்
முல்லை
தும்பை
செவ்வந்தி
அரளி
வெட்டி வேர்
மந்தாரை
எருக்கு
சாமந்தி
ஜாதிமல்லி
பவழ மல்லி
ஊமத்தை
மகிழம் பூ
தாழம் பூ
வில்வம்
புன்னை

ஜெனனி ஜோதிட மையம்
அஸ்ட்ரோ ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
9444663519

பிள்ளையாரின் பேரன்புக்கு பாத்திரமாகி அவரின் அருள் பெற்ற அடியார்கள்

(01) ஔவையார்
(02)அகத்திய பெருமான்
(03)கச்சியப்ப சிவாச்சாரியார்
(04) நம்பியாண்ட நம்பி
(05) நக்கீரர்

ஜெனனி ஜோதிட மையம்
அஸ்ட்ரோ ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
9444663519

திருவண்ணாமலையில் கிரிவல பாதையில்

07 வது இலிங்கமான குபேரன் லிங்கத்திற்கு அடுத்ததாக உள்ள

இடுக்கு பிள்ளையார் கோயிலில்

பின் வாசல் வழியாக நுழைந்து
முன் வாசல் வழியாக வெளியே வந்தால் பெண்களுக்கு கருப்பை பிரச்சனை நீங்கி குழந்தை பாக்கியம் கிட்டும்.
வாத வலி,
மூட்டு வலி,
முழங்கால் வலி,
உடல் வலி நீங்கும்
வலி கட்டுபடும்.
உடலில்
தீய ஆரோ விலகி விடும்.

அனைத்து நலன்களும் தரும் வெள்ளெருக்கு பிள்ளையார்

மிகவும் சுத்தமான இடத்தில் வளர்க்கப்படும் வெள்ளெருக்கு வேரை எடுத்து விநாயகர் செய்து வழிபட்டால் அனைத்து விதமான செல்வங்களும்
செல்வாக்கும்
சொல் வாக்கும்
ஏற்படும்.

ஜெனனி ஜோதிட மையம்
அஸ்ட்ரோ ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
9444663519

பிள்ளையாரை மந்திரங்களாக உச்சரிக்கும் போது

ஆகாய பூதமாகவும்

குண்டலினி யோக சாதனையின் போது காற்று பூதமாகவும்

கணபதியின் ஹோமத்தின் மூலம் நெருப்பாகவும்

கும்பத்தின் போது பிள்ளையார் நீர் பூதமாகவும்

சாணம்,மஞ்சள்,உலோகம்,மரமாக வழிபடும் போது பூமி (மண்) பூதமாக பிள்ளையாரை வழிபடுகிறோம்

எந்தப் பொருளை நினைத்து நாம் வழிபட்டாலும் அந்தப் பொருளாகவே மாறி நமக்கு அருள் புரிவது பிள்ளையாருக்கே உள்ள தனிச் சிறப்பாகும்.

ஜெனனி ஜோதிட மையம்
அஸ்ட்ரோ ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
9444663519

ஔவையார் அருளிய விநாயகர் அகவல்

நக்கீரர் அருளிய விநாயகர் அகவல்

கபிலர் அருளிய விநாயக கவசம்

விநாயகர் சகஸ்ரநாமம்

காரிய சித்தி மாலை

விநாயகர் 108 போற்றிகள்

ஆதி சங்கரின் கணேச புஜங்கம் 8 ஸ்லோங்கள், தினமும் படிக்கலாம்

தேய்பிறை சதுர்த்தி திதி அன்றாவது ஏதேனும் ஒன்றாவது வைராக்கியமாக கடைப்பிடித்து படித்து வந்தால் பிள்ளையாரின் அருள் பார்வை நம் மீது பட்டு சகல சௌபாக்கியங்களும் பெறலாம்

ஜெனனி ஜோதிட மையம்
அஸ்ட்ரோ ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
9444663519

வினை தீர்க்கும்

‘வி’ நாயகரை’
வழிபடுவோம்.

‘வி’ என்றால் இதற்கு மேல் இல்லை எனப் பொருள்.

‘நாயகர்’ என்றால் தலைவர் எனப் பொருள்.

இவருக்கு மேல் பெரியவர் யாருமில்லை…

அதனாலேயே அர்ச்சனை செய்யப்படும்போது…
‘ஓம் அநீஸ்வராய நம’ என்றும் கூறுவார்கள்.

‘அநீஸ்வராய’ என்பதற்கு தனக்கு மேல் ஒரு ஈஸ்வரன் இல்லை என்பது பொருளாகும்.

இவ்வாறு,
தெய்வங்களுக்கு எல்லாம் முதன்மை தெய்வமாக விளங்குபவர் விநாயகப் பெருமான்.

இவரை முதலில் வணங்காமல் எந்த ஒரு நல்ல காரியத்தையும் தொடங்கக் கூடாது என்கிறது இந்து சாஸ்திரம்.

எளியோருக்கு எளியோராக இருந்து அருளக் கூடியவர் கணபதி.

விநாயகர் ‘ஓம்’ எனும் பிரணவ மந்திரத்தின் உட்பொருளாகவும்,
அதன் வடிவமாகவும் திகழ்கிறார்.

‘ஓம்’ எனும் பிரணவ மந்திரம்…

‘அ’ கரம்,
‘உ’ கரம்,
‘ம’ கரம்
எனும் மூன்று எழுத்துகளால் ஆனது.

அவற்றுள்,
‘அ’ படைத்தல் தொழிலுக்குரிய பிரம்மாவையும்…

‘உ’ காத்தல் தொழிலுக்குரிய விஷ்ணுவையும்.

‘ம’ அழித்தல் தொழிலுக்குரிய
சிவனையும் குறிக்கும்

இவை மூன்றிற்கும் மூலமாகவும்…

முத்தொழில்களின் அம்சமாகவும்..

மும்மூர்த்திகளின் சொரூபமாகவும் உள்ளவர் விநாயகர்.

அதனாலேயே,
முதலில் இவரை வழிபட்ட பின்பே…

மற்ற தெய்வங்களுக்கு செய்யும் வழிபாடு பூர்த்தியாகும்.

ஜெனனி ஜோதிட மையம்
அஸ்ட்ரோ ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
9444663519

விநாயகர் சிலையின் அதிசய தோற்றங்கள்!

சிந்தனைக்கும், அறிவுக்கும் எட்டாத தத்துவமாக விளங்கும் விநாயகப் பெருமானின் திருவுருவச் சிலைகளுக்கு…

ஒரு தனிச்சிறப்பு உண்டு.

கன்னியாகுமரியில், கேரளாபுரத்தில் உள்ள மரத்தடி விநாயகர்…

ஆவணி முதல் தை மாதம் வரை,
ஆறு மாதம் கறுமையாகவும்…

மாசி முதல் ஆடி வரை,
ஆறு மாதம் வெண்மையாகவும் காட்சி தருகிறார்.

வேலூரில் உள்ள தேனாம்பாக்கத்தில், லிங்க உருவில் உள்ள விநாயகரைச் சுற்றி,

ஜெனனி ஜோதிட மையம்
அஸ்ட்ரோ ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
9444663519

10 விதமான விநாயகர்கள் காட்சி தருகின்றனர்.

திருச்செங்காட்டான் குடியில் உள்ள விநாயகர் மனித உருவில் எழுந்தருளியுள்ளார்.

சுசீந்திரத்தில்,
‘கணேசினி’ என்ற பெயரில்,
பெண் உருவமாகத் திகழ்கிறார்.

புதுச்சேரியில் உள்ள மணக்குள விநாயகர், ஆறு முகங்களுடனும்…

சேலம் சுகவனேசுவரர் கோவிலில் உள்ள விநாயகர்…
இரு கைகளிலும் கொழுக்கட்டை ஏந்தி காட்சி தருகிறார்.

ஜெனனி ஜோதிட மையம்
அஸ்ட்ரோ ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
9444663519

விநாயகர் ஸ்லோகம்
ஐந்து கரத்தனை யானை முகத்தனை…

இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை…

நந்தி மகன்தனை ஞானக் கொழுத்தினை…

பந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே.

விநாயகர் சகஸ்ரநாமம்
“சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம்
ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே…”

விநாயகர் ஸ்லோகம்
“ஓம் தத்புருஷாய வித்மஹே
வக்ரதுண்டாய தீமஹி
தன்னோ தந்தி ப்ரசோதயாத்.”

கணபதி ஸ்லோகம்
“அல்லல்போம் வல்வினைபோம் அன்னைவயிற்றில் பிறந்த
தொல்லைபோம் போகாத் துயரம்போம் நல்ல
குணமதிக மாம் அருணைக் கோபுரத்தில் மேவும்
கணபதியைக் கைதொழுதக் கால்.”

விநாயகர் காயத்ரி மந்திரம்
“வக்ரதுண்டாய ஹீம்
ஓம் நமோ ஹேரம்ப மதமோதித
மம சர்வ சங்கடம் நிவாரயே ஸ்வாஹா
ஓம் கம் க்ஷிப்ரப்ரசாதனாய நமஹ.”

மஹா கணபதி மந்திரம்
“ஓம் ஸ்ரீம் ஹிரீம் க்லீம் க்ளவும் கம் கன் கணபதியே
வரவரத சர்வ ஜன மே வசமாயன ஸ்வாகா!”

ஜெனனி ஜோதிட மையம்
அஸ்ட்ரோ ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
9444663519

விநாயகர் மந்திரம்
“விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்…

விநாயகனே வேட்கை தணிவிப்பான்…

விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம்…

தன்மையினால் கண்ணிற் படுமின் கனிந்து.”

விநாயகனே வினை தீர்ப்பவனே…

வேழ முகத்தோனே ஞால முதல்வனே!

குணாநிதியே குருவே சரணம்!

குறைகள் களைய இதுவே தருணம்!

உமாபதியே உலகம் என்றாய்…

ஒரு சுற்றினிலே வலமும் வந்தாய்…

கணநாதனே மாங்கனியை உண்டாய்!

கதிர்வேலனின்
கருத்தில் நின்றாய்.

மேலே குறிப்பிட்ட மந்திரங்களுல் ஏதேனும் ஒன்றை…

தினமும் கூறி, அருகம்புல் வைத்து பூஜித்து வந்தால்…

அன்றைய நாளில் நீங்கள் செய்யும் ஒவ்வொரு காரியமும் நல்லபடியாக நடக்கும்.

ஜெனனி ஜோதிட மையம்
அஸ்ட்ரோ ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
9444663519

விநாயகர் சதுர்த்தி பூஜையின் போது…

விநாயகருக்கு ‘எருக்கம் பூ மாலை’ அணிவித்து…

கொழுக்கட்டை,
மற்றும்
இனிப்புகள் படையல் செய்து…

‘அருகம்புல்லால்’ அர்ச்சனை செய்த படி.

இந்த மந்திரங்களை சொல்லி வணங்கினால் விநாயகரின் அருள் மிக சிறப்பாக கிடைக்கும்.

மேலும்.

அவரை வணங்கி ‘நெற்றியில்’ குட்டிக் கொண்டு…

‘தோப்புக்கரணம்’ போட்டு வர அறிவும், உடலும் வலுவடையும்.

பூஜையின் போது துதிக்க வேண்டிய

ஜெனனி ஜோதிட மையம்
அஸ்ட்ரோ ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
9444663519

108 கணபதி போற்றிகள்.

  1. ஓம் அத்தி முகனே போற்றி
  2. ஓம் அம்பிகைச் செல்வா போற்றி
  3. ஓம் அம்மையே அப்பா போற்றி
  4. ஓம் அருமறைக் கொழுந்தே போற்றி
  5. ஓம் அமரர்கள் கோனே போற்றி
  6. ஓம் அடியார்க்கு இனியோய் போற்றி
  7. ஓம் அங்குச பாஸா போற்றி
  8. ஓம் அரு உருவானாய் போற்றி
  9. ஓம் ஆறுமுகன் அண்ணா போற்றி
  10. ஓம் அணுவினுக்கு அணுவே போற்றி
  11. ஓம் அண்டங்கள் ஆனாய் போற்றி
  12. ஓம் அவல், பொரி, அப்பம், அருந்துவோய் போற்றி
  13. ஓம் பிட்டும், முப்பழமும் நுகர்வாய் போற்றி
  14. ஓம் ஆதி மூலமே போற்றி
  15. ஓம் ஆருயிர்க்குயிரே போற்றி
  16. ஓம் ஆரா அமுதா போற்றி
  17. ஓம் இருள் தனைக் கடிவாய் போற்றி
  18. ஓம் இடையூறு களைவாய் போற்றி
  19. ஓம் இன்பத்தின் பெருக்கே போற்றி
  20. ஓம் இருவினை அறுப்பாய் போற்றி
  21. ஓம் ஈசனார் மகனே போற்றி
  22. ஓம் ஈரேழாம் உலகா போற்றி
  23. ஓம் உத்தமக் குணாளா போற்றி
  24. ஓம் உலகெலாம் காப்பாய் போற்றி
  25. ஓம் உண்மை நெறியாளா போற்றி
  26. ஓம் உம்பர்கள் தொழுவாய் போற்றி
  27. ஓம் ஊழ்வினை ஒழிப்பாய் போற்றி
  28. ஓம் எங்குமே நிறைவாய் போற்றி
  29. ஓம் என்றுமே திகழ்வாய் போற்றி
  30. ஓம் எங்குமே அமர்ந்தாய் போற்றி
  31. ஓம் எவர்க்குமே அருள்வாய் போற்றி
  32. ஓம் எதையுமே முடிப்பாய் போற்றி
  33. ஓம் எண்குண சீலா போற்றி
  34. ஓம் எழு பிறப்பறுப்பாய் போற்றி
  35. ஓம் ஏழைப் பங்காளா போற்றி
  36. ஓம் ஏக நாயகனே போற்றி
  37. ஓம் எழில் மிகு தேவே போற்றி
  38. ஓம் ஔவையார்க் கருள்வாய் போற்றி
  39. ஓம் ஐங்கர முடையாய் போற்றி
  40. ஓம் ஐம்புலன் அடக்குவாய் போற்றி
  41. ஓம் நான்கு நற் புயத்தாய் போற்றி
  42. ஓம் நாவலர் பணிவாய் போற்றி
  43. ஓம் முக்கண்கள் உடையாய் போற்றி
  44. ஓம் முழு முதற் பொருளே போற்றி
  45. ஓம் ஒளி மிகு தேவே போற்றி
  46. ஓம் ஓங்கார மூர்த்தி போற்றி
  47. ஓம் கணத்து நாயகனே போற்றி
    48 . ஓம் கருணையார் மூர்த்தியே போற்றி
  48. ஓம் கலைஞானக் குருவே போற்றி
  49. ஓம் கயமுகனைக் காய்ந்தாய் போற்றி
  50. ஓம் கற்பக களிறே போற்றி
  51. ஓம் கண்கண்ட தேவே போற்றி
  52. ஓம் கந்தனை வென்றாய் போற்றி
  53. ஓம் கனிதனைப் பெற்றாய் போற்றி
  54. ஓம் சங்கத்துத் தமிழே போற்றி
  55. ஓம் சரவணன் தொழுவாய் போற்றி
  56. ஓம் சர்வ லோகேசா போற்றி
  57. ஓம் சாந்தமார் மூர்த்தி போற்றி
  58. ஓம் சுருதியின் முடிவே போற்றி
  59. ஓம் சொற்பதம் கடந்தாய் போற்றி
  60. ஓம் நம்பிக்கு அருள்வாய் போற்றி
  61. ஓம் நாதனே கீதா போற்றி
  62. ஓம் தவசிகள் தொழுவாய் போற்றி
  63. ஓம் தாயினும் நல்லாய் போற்றி
  64. ஓம் தரும குணாளா போற்றி
  65. ஓம் தம்பிக்கு வள்ளியைத் தந்தாய் போற்றி
  66. ஓம் தூயவர் துணைவா போற்றி
  67. ஓம் துறவிகள் பொருளே போற்றி
  68. ஓம் நித்தனே, நிமலா போற்றி
  69. ஓம் நீதி சால் துரையே போற்றி
  70. ஒம் நீல மேனியனே போற்றி
  71. ஓம் நிர்மலி வேனியா போற்றி
  72. ஓம் பேழை நல் வயிற்றாய் போற்றி
  73. ஓம் பெரிச்சாளி வாகனா போற்றி
  74. ஓம் பாரதம் வரைந்தாய் போற்றி
  75. ஓம் பாவலர் பணிவாய் போற்றி
  76. ஓம் பாசத்தை அறுப்பாய் போற்றி
    78 . ஓம் பாவப்பிணி ஒழிப்பாய் போற்றி
  77. ஓம் மும்மலம் அறுப்பாய் போற்றி
  78. ஓம் முத்தியை தருவாய் போற்றி
  79. ஓம் வேழ முகத்தாய் போற்றி
  80. ஓம் வேட்கையை தணிவிப்பாய் போற்றி
  81. ஓம் வேள்வியின் முதல்வா போற்றி
  82. ஓம் வேதாந்த விமலா போற்றி
  83. ஓம் ஒழுக்கமது அருள்வாய் போற்றி
  84. ஓம் உடல் நலம் தருவாய் போற்றி
  85. ஓம் செல்வம் தருவாய் போற்றி
  86. ஓம் செறுக்கினை அழிப்பாய் போற்றி
  87. ஓம் சிந்தனையை அடக்குவாய் போற்றி.
  88. ஓம் சினம், காமம், தவிர்ப்பாய் போற்றி.
  89. ஓம் கல்வியை அருள்வாய் போற்றி.
  90. ஓம் கரத்தலை ஒழிப்பாய் போற்றி.
  91. ஓம் ஒளவியம் அகற்றுவாய் போற்றி.
  92. ஓம் அறநெறி புகட்டுவாய் போற்றி.
  93. ஓம் அவாவினை அடக்குவாய் போற்றி.
  94. ஓம் அன்பினை வளர்ப்பாய் போற்றி
  95. ஓம் ஊக்கமது அருள்வாய் போற்றி.
  96. ஓம் அமிர்த கணேசா போற்றி.
  97. ஓம் ஆக்கம் பெருக்குவாய் போற்றி.
  98. ஓம் வலம்புரி விநாயகா போற்றி
  99. ஓம் வரமெல்லாம் தருவாய் போற்றி.
  100. ஓம் சித்தி விநாயகா போற்றி
  101. ஓம் சிவபதம் அருள்வாய் போற்றி
  102. ஓம் சுந்தர விநாயகா போற்றி
  103. ஓம் சுக போகம் தருவாய் போற்றி
  104. ஓம் அனைத்து ஆனாய் போற்றி
  105. ஓம் ஆபத் சகாயா போற்றி
  106. ஓம் அமிர்த கணேசா போற்றி
  107. ஓம் ஆபத் சகாயா போற்றி
  108. ஓம் அமிர்த கணேசா போற்றி

போற்றி
போற்றி
போற்றி

ஜெனனி ஜோதிட மையம்
அஸ்ட்ரோ ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
9444663519

Related Posts