ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
வடகிழக்கு மூலை என்பது வருமானம் வரக்கூடிய பகுதி அந்த வருமானம் வரக்கூடிய பகுதியில் எக்காரணத்தைக் கொண்டும் கழிவறை வரக்கூடாது வடகிழக்கில் மாடிபடிக்கட்டு, செப்டிக்டேங்க், சமையலறை வரக்கூடாது வடக்கு, கிழக்கு,தெற்கு, மேற்கு வாசல் உள்ள வீடாக இருந்தாலும் வடகிழக்கில் ஜன்னல்(24×7) கண்டிப்பாக வேண்டும் சூரிய ஒளி வீட்டிற்குள் வடகிழக்குப் பகுதி வழியாக வரவேண்டும்
வீட்டில் முதலில் சமையலறையை தென்கிழக்கில் தான் வரவேண்டும் அப்படி அமைக்க முடியாத பட்சத்தில் வடமேற்கில் இரண்டாவதாக கொடுக்கலாம் வடமேற்கில் சமையலறை கொடுக்கும்பொழுது கிழக்கு நோக்கி சமைக்க வேண்டும்
ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
பிரம்மஸ்தானம் வாஸ்து
வீட்டின் நடுப்பகுதியை பிரம்மஸ்தானம் என்கின்றோம் பிரம்ம ஸ்தான பகுதியில் எக்காரணத்தைக் கொண்டும் தூண், ஹை சீலிங் வரக்கூடாது நிறைய வீடுகளில் பிரம்மஸ்தானம் பகுதிகளில் ஹை சீலிங் கொடுத்து தவறுகளைச் செய்து விடுகிறார்கள்
சில வீடுகளில் தெற்குப் பகுதியும் கட்டிடமாக கட்டிவிட்டு வடக்குப் பகுதியும் கட்டிடமாக கட்டிவிட்டு நடுப்பகுதி பிரம்மஸ்தானம் பகுதி முழுவதும் திறக்கப்பட்ட அமைப்பாக வைத்திருப்பார்கள் இது மிகப்பெரிய தவறு
ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
வியாபார நிறுவனங்களில் கட்டிடம் சதுரமாக இருந்தால் வாஸ்துபடி சரி என நினைத்து பல லட்சங்கள் முதலீடு போட்டு தொழில் ஆரம்பித்து நஷ்டம் அடைந்து விடுகின்றனர் வடமேற்கில் மூடப்பட்ட அமைப்பாகும் வடமேற்கில் தண்ணீர் தொட்டி வடமேற்கில் போர்வெல் இது போன்ற அமைப்புகளை ஏற்படுத்தி தவறுகளைச் செய்து விடுகிறார்கள்வியாபார நிறுவனங்களில் வடமேற்குப் பகுதி மிக சரியாக அமைக்கப்படவேண்டும்.வியாபார நிறுவனங்களில் வடமேற்கு மூலை மட்டுமல்ல வடகிழக்கு, தென்கிழக்கு, தென்மேற்கு, என ஒவ்வொரு மூலையிலும் வாஸ்து படி சரியாக அமைந்தால் மட்டுமே வியாபாரத்தில் வெற்றி பெற முடியும்
ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
தென்மேற்கு மூலையில் பீரோ வடக்கு அல்லது கிழக்கு பார்த்து வைக்க வேண்டும் நகை பத்திரம் பணம் தென்மேற்கு மூலையில் தான் வைக்க வேண்டும் திருமணமான இளம் தம்பதியர் தென்மேற்கு மூலையில் தான் படுக்க வேண்டும் தென்மேற்கு மூலை பெட்ரூமில் சில வீடுகளில் வடமேற்கில் பீரோ வைத்துவிடுகிறார்கள் இது மிகப்பெரிய தவறு தென்மேற்கு மூலையில் போர்வெல் கழிவறை செப்டிக் டேங்க் தலைவாசல் இவற்றையெல்லாம் அமைக்கக்கூடாது திருமணமாகாதவர்கள் தென்மேற்கு மூலையில் படுத்து உறங்கக்கூடாது
ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
கடைக்கால்
கடைக்கால் தோண்டும் பொழுது முதலில் வடகிழக்கில் ஆரம்பித்து வடமேற்கு தென்கிழக்கு இறுதியில் தென்மேற்கு பள்ளம் தோண்டி முடிக்க வேண்டும் கடைக்கால் கட்டத் துவங்கும் பொழுது முதலில் தென்மேற்கு ஆரம்பித்து அடுத்து தென்கிழக்கு அடுத்தது வடமேற்கு இறுதியில் வடகிழக்கில் கட்டி வேண்டும்.வீடு கட்ட செங்கல் ஜல்லி போன்ற பொருட்கள் மேற்கு தெற்கு பகுதியில் வைக்கலாம்
ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
வடக்கு, கிழக்கு,தெற்கு, மேற்கு நான்கு திசையில் உள்ள அனைத்து மனைகளும் நல்ல பலன் கொடுக்கும் மனைகள் தான்.தெற்கு, மேற்கு மனைகளில் வீடு கட்டும் பொழுது தண்ணீர் தொட்டி, செப்டிக் டேங்க், கழிவறை, மாடிப்படிக்கட்டு, காலியிடம் இதை மிகச்சரியாக தெற்கு மேற்கு மனைகளில் உள்ளவர்கள் அமைக்க வேண்டும்.நாம் தேர்ந்தெடுக்கும் மனை சதுரம் அல்லது செவ்வகமாக இருக்க வேண்டும் கிழக்கு மேற்கு நீளமாகவும் வடக்கு தெற்கு அகலம் குறைவாகவும் உள்ள மனையை ஆண் மனை என்கின்றோம் இதை வாங்குவது மிக சிறப்பு.வடக்கு,தெற்கு நீளம் அதிகமாகவும் கிழக்கு மேற்கு அகலம் குறைவாக உள்ள மனையை பெண்மனை என்கின்றோம்
ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
வீட்டில் வடக்கு மற்றும் மேற்கு சந்திக்கக்கூடிய பகுதியை வடமேற்கு மூலை என்கின்றோம் வடமேற்குப் பகுதியில் உள்ள அறையில் விற்பனை செய்யக்கூடிய பொருட்களை வைக்கலாம் திருமணமாகாத இளம் பெண்கள் மற்றும் ஆண்கள் வடமேற்கு அறையை பயன்படுத்தும் பொழுது விரைவில் திருமணம் நடைபெறும்.வெளிநாடு செல்ல விருப்பம் உள்ளவர்கள் மற்றும் விருந்தினர்கள் தங்கும் அறையாக வடமேற்கு அறையை பயன்படுத்தலாம்
ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
வடகிழக்கு ஈசான்யம் எவ்வளவு முக்கியமோ அதேபோல் இந்த தென்மேற்கு நைருதி மூலை முக்கிய பங்கு வகிக்கிறது. வடகிழக்கு எவ்வளவு வெட்ட வெளியாய் இருக்க வேண்டுமோ அதேபோல் தென்மேற்கு மூடப்பட்டிருக்க வேண்டும்.
தென்மேற்கு மூலையில் குடும்ப தலைவன் படுக்கை அறை இருக்கவேண்டும்
தென்மேற்கு மூலையில் தேவையில்லாத பழைய பொருட்களை நிறைய வீடுகள் வைக்கிறார்கள் அது மிகப்பெரிய தவறு
ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
வாஸ்து பார்த்து வீடு கட்டினோம் இப்ப பிரச்சனையா இருக்கு
வீட்ல
நிம்மதியா குடியிருக்க முடியல இப்படி சொல்லக்கூடிய நண்பர்கள் நிறைய இருக்காங்க
அதற்கு பல காரணங்கள் இருக்கு வரைபடங்களை மட்டும் வாங்கி கொண்டு வந்து கட்டுவது
வாஸ்து என்கிற பெயரில் (வடகிழக்கு ஹால் தென்கிழக்கு கிச்சன் தென்மேற்கு பெட்ரூம் மற்றும் வடமேற்கு கழிவறை )இதை மட்டும் தெரிந்து வைத்துக்கொண்டு கொத்தனார் மற்றும் பொறியாளர்களை வைத்து கட்டுவது
புத்தகங்களைப் படித்துவிட்டு கட்டுவது இதுபோல நிறைய தவறுகள் உள்ளன
ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
வீட்டிற்கு ஆழ்துளை கிணறு அமைக்கும் பொழுது வடகிழக்கு பகுதியில் மட்டுமே அமைக்க வேண்டும் வேறு எந்த காரணத்திற்காகவும் தென்கிழக்கு தென்மேற்கு அல்லது வடமேற்கு பகுதியில் அமைக்கக்கூடாது
ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
வீட்டில் திருமணத்தடை இருப்பதற்கு வாஸ்து காரணமாக இருக்குமா?
நிச்சயமாக வாஸ்து திருமணம் சார்ந்த பிரச்சனைகளுக்கு மிகப்பெரிய தீர்வை கொடுக்கும். ஒரு வீட்டில் ஆணுக்கு திருமணம் தடைபட்டாலும் அல்லது தள்ளிப்போனாலும் அந்த வீட்டில் வடக்கு, வடகிழக்கு சார்ந்த பிரச்சனைகள் இருக்கும்.
அதேபோன்று பெண்ணுக்கு திருமணம் தள்ளிப்போகிறது என்றால் அந்த வீட்டில் கிழக்கு மற்றும் தென்கிழக்கு பகுதி மிகப்பெரிய அளவில் வாஸ்துபடி பாதிப்பில் இருக்கலாம்.
உங்கள் வீட்டிலும் திருமணத்தடை உள்ளதா? – கீழ்க்கண்ட அமைப்புகளில் தங்களின் வீடும் இருக்கிறதா? என தெரிந்து கொள்ளுங்கள்.
ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
வடக்கு மற்றும் கிழக்கில் போதிய திறப்புகள் இல்லாமல் மூடிய அமைப்பில் இருப்பது.தெற்கிலும், மேற்கிலும் அதிக இடம் விட்டு கிழக்கிலும், வடக்கிலும் குறைந்த இடத்துடன் வீட்டை அமைப்பது.தெரு தாக்கம், தெருப்பார்வை போன்ற அமைப்புகள் தவறான இடத்தில் வருவது.வீட்டின் சமையலறை வடகிழக்கில் அமைத்து இருப்பது.
வீட்டின் வடக்கு மற்றும் வடகிழக்கு பகுதியில் மாடிக்கு செல்ல படிக்கட்டுக்கான அமைப்புகள் வருவது.வீட்டிற்கான கிணறு, ஆழ்துளை கிணறு, நிலத்தடி நீர்த்தொட்டி போன்ற அமைப்புகள் தென்கிழக்கு அல்லது வடமேற்கில் வருவது.
இது மட்டுமல்லாமல் மேலும் சில தவறான இருக்கும்போது திருமணத்தடை ஏற்படலாம்.
ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க