நவராத்திரி 9 நாள் வழிபாடு

ஜெனனி ஜோதிட மையம்
அஸ்ட்ரோ ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
வாழ்க வளத்துடன்
9444663519

நவராத்திரி 9 நாள் வழிபாடு

நவராத்திரிக்கு துர்க்கையான பார்வதியை முதல் 3 நாட்களும்,

அடுத்து
லட்சுமியை 3 நாட்களும்,

இறுதி 3 நாட்கள் சரஸ்வதியையும்

10-வது நாள் விஜய சாமுண்டீஸ்வரியாக வணங்க வேண்டும்

நவராத்திரி பண்டிகையின் முக்கிய நோக்கமே, நாம் எல்லோரும் ஒன்றே, அனைத்தும் இறைசக்தியின் வடிவமே என்று உணர்த்துவதுதான். துர்க்கா,
லட்சுமி,
சரஸ்வதி
ஆகிய மூன்று இறைசக்திகளும்
ஒன்று சேர்ந்து மகிஷாசுர மர்த்தினியாக
அவதாரம் எடுத்து, மகிஷன் எனும் அரக்கனை அழிப்பதையே நவராத்திரி வரலாறு என்கிறார்கள்.

துர்க்கையை வணங்கினால் தீய எண்ணங்கள் வேரோடு அழிந்து மன உறுதி கிடைக்கும்.

லட்சுமியை வணங்கினால் பொன், பொருள், நல்ல ஒழுக்கம், உயர்ந்த பண்பாடுகள், கருணை, மனிதநேயம், நல்ல சிந்தனைகள் கிடைக்கும்.

சரசுவதியை வழிபட்டால் ஞானம், உயர்ந்த கல்வி, கலைகளில் தேர்ச்சி கிடைக்கும்.

இந்த மூன்று சக்திகளும் நவராத்திரியின் 9 நாட்களும் எந்தெந்த வடிவில் நமக்கு காட்சித் தருகிறார்கள்? அவர்களை எப்படி வணங்க வேண்டும்? என்ன நைவேத்தியம் செய்ய வேண்டும்? அதனால் என்ன பலன் கிடைக்கும்? என்பன போன்றவற்றை ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.

ஜெனனி ஜோதிட மையம்
அஸ்ட்ரோ ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
வாழ்க வளத்துடன்
9444663519

9 நாட்களும் இதன்படி பூஜைகள் செய்தால் அளவற்ற பலன்களை பெறலாம்.

முதல் நாள் 
வடிவம் : மகேஸ்வரி (மது கைடவர் என்ற அசுரனை அழித்தவள்)
பூஜை: 2 வயது சிறுமியை குமாரி அவதாரத்தில் வணங்க வேண்டும்.
திதி: பிரதமை
கோலம் : அரிசி மாவால் பொட்டுக் கோலம் போட வேண்டும்.
பூக்கள் : மல்லிகை, சிவப்புநிற அரளி, வில்வ பூக்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்.
நைவேத்தியம் : வெண்பொங்கல், சுண்டல், பழம், எலுமிச்சை சாதம், தயிர் சாதம், சர்க்கரை பொங்கல், மொச்சை, சுண்டை, பருப்பு வடை.
ராகம் : தோடி ராகத்தில் பாட வேண்டும்.
பலன் : வறுமை நீங்கும், வாழ்நாள் பெருகும்.

இரண்டாம் நாள்
வடிவம் : ராஜராஜேஸ்வரி (மகிஷனை வதம் செய்ய புறப்படுபவள்)
பூஜை : 3 வயது சிறுமியை கவுமாரி வடிவமாக வணங்க வேண்டும்.
திதி : துவிதியை
பூக்கள் : முல்லை, துளசி, மஞ்சள்நிற கொன்றை, சாமந்தி, நீல சம்பங்கி பூக்களால் பூஜிக்க வேண்டும்.
நைவேத்தியம் : புளியோதரை, எள் பாயாசம், தயிர்வடை, வேர்க்கடலை சுண்டல், எள் சாதம்.
ராகம் : கல்யாணி ராகத்தில் கீர்த்தனைகள் பாடலாம்.
கோலம் : மாவினால் கோலம் போட வேண்டும்.
பலன் : நோய்கள் நீங்கும், உடல் ஆரோக்கியம் பெருகும்.
 
மூன்றாம் நாள்
வடிவம் : வாராகி (மக்கிஷனை அழித்தவள்)
பூஜை : 4 வயது சிறுமியை கல்யாணி வேடத்தில் பூஜித்து வணங்க வேண்டும்.
திதி : திருதியை
கோலம் : மலர் கோலம் போட வேண்டும்.
பூக்கள் : செண்பக மொட்டு, குங்குமத்தால் அர்ச்சனை செய்ய வேண்டும்.
நைவேத்தியம் : கோதுமை சர்க்கரைப் பொங்கல், காராமணி சுண்டல்.
ராகம் : பாட வேண்டிய ராகம் காம்போதி.
பலன் : தணதானியம் பெருகும் வாழ்வு சிறப்பாக அமையும்.

நான்காம் நாள்
வடிவம் : மகாலட்சுமி (சிங்காசனத்தில் வெற்றி திருக்கோலம்)
பூஜை : 5 வயது சிறுமிக்கு ரோகிணி வேடத்தில் பூஜிக்க வேண்டும்.
திதி : சதுர்த்தி.
கோலம் : அட்சதை கொண்டு படிக்கட்டு போல கோலமிட வேண்டும்.
பூக்கள் : செந்தாமரை, ரோஜா மற்றும் ஜாதி பூக்களால் அர்ச்சிக்க வேண்டும்.
நைவேத்தியம் : தயிர் சாதம், அவல் கேசரி, பால் பாயாசம், கற்கண்டு பொங்கல், கதம்ப சாதம், உளுந்துவடை, பட்டாணி சுண்டல்.
ராகம் : பைரவி ராகத்தில் பாடலாம்.
மாலை : கஸ்தூரி மஞ்சள், முத்து போன்றவற்றால் மாலை செய்து போடலாம்.
பலன் : கடன் தொல்லை தீரும்.

ஐந்தாம் நாள் 
வடிவம் : மோகினி (சும்ப நிசும்பனின் தூதர்கள் தூது போன நாள்)
பூஜை : 6 வயது சிறுமியை வைஷ்ணவி வேடத்தில் பூஜிக்க வேண்டும்.
திதி : பஞ்சமி.
கோலம் : கடலை மாவால் பறவை கோலம் போட வேண்டும். வாசனை தைலத்தால் அலங்கரிக்க வேண்டும்.
பூக்கள் : கதம்பம், மனோரஞ்சிதம் பூக்களால் பூஜிக்க வேண்டும்.
நைவேத்தியம் : சர்க்கரை பொங்கல், கடலை பருப்பு வடை, பாயாசம், தயிர் சாதம், பால் சாதம், பூம்பருப்பு சுண்டல்.
ராகம் : பஞ்சமாவரணை கீர்த்தனைகள் பாட வேண்டும். பந்துவராளி ராகமும் பாடலாம்.
பலன் : நாம் விரும்பும் அனைத்து செல்வங்களும் கிடைக்கும்.

ஆறாம் நாள்
வடிவம் : சண்டிகாதேவி (சர்பராஜ ஆசனத்தில் அமர்ந்திருக்கும் கோலம்)
பூஜை : 7 வயது சிறுமியை இந்திராணி, காளிகாவாக நினைத்து பூஜிக்க வேண்டும்.
திதி : சஷ்டி.
கோலம் : கடலை மாவினால் தேவி நாமத்தை கோலமிட வேண்டும்.
பூக்கள் : பாரிஜாதம், விபூதிப் பச்சை, செம்பருத்தி, சம்பங்கி, கொங்கம்.
நைவேத்தியம் : தேங்காய் சாதம், தேங்காய் பால்பாயாசம், ஆரஞ்சு பழம், மாதூளை, பச்சைப்பயறு சுண்டல், கதம்ப சாதம்.
ராகம் : நீலாம்பரி ராகத்தில் பாடலாம்.
பலன் : வழக்குகளில் வெற்றி உண்டாகும். கவலைகள் நீங்கி பொருட்கள் சேரும்.

ஏழாம் நாள் 
வடிவம் : சாம்பவித் துர்க்கை (பொற் பீடத்தில் ஒரு பாதம் தாமரை மலரில் இருக்க வீணை வாசிக்கும் தோற்றம்)
பூஜை : 8 வயது சிறுமியை பிராக்மி மகா சரஸ்வதி, சுமங்கலியாக கருதி பூஜிக்க வேண்டும்.
திதி : சப்தமி
கோலம் : நறுமண மலர்களால் கோலமிட வேண்டும்.
பூக்கள் : தாழம்பு, தும்பை, மல்லிகை, முல்லை.
நைவேத்தியம் : எலுமிச்சம் பழசாதம், பழ வகைகள், வெண்பொங்கல், கொண்டக்கடலை சுண்டல், பாதாம் முந்திரி பாயாசம், புட்டு.
ராகம் : பிலஹரி ராகத்தில் பாடி பூஜிக்க வேண்டும்.
பலன் : வேண்டும் வரம் அனைத்தும் கிடைக்கும்.

எட்டாவது நாள் 
வடிவம் : நரசிம்ம தாரினி (கரும்பு வில்லுடன் சுற்றிலும் அணிமா முதலிய அஷ்ட சக்திகளுடன் ரக்த பீஜனை சம்காரம் செய்த வடிவம்)
பூஜை : 9 வயது சிறுமியை மகா கவுரியாக பூஜிக்க வேண்டும்.
திதி : அஷ்டமி.
கோலம் : பத்ம கோலம்
பூக்கள் : மருதோன்றி, சம்பங்கி பூக்கள், வெண்தாமரை, குருவாட்சி.
நைவேத்தியம் : பால்சாதம், தேங்காய் சாதம், புளியோதரை, மொச்சை சுண்டல்.
ராகம் : புன்னகை வராளி ராகத்தில் பாடி பூஜிக்கலாம்.
பலன் : நமக்கு இஷ்ட சித்தி உண்டாகும்.

ஒன்பதாம் நாள்
வடிவம் : பரமேஸ்வரி, சுபத்ராதேவி (கையில் வில, பாணம், அங்குசம், சூலத்துடன் தோற்றம்)
பூஜை : 10 வயது சிறுமியை சாமுண்டி வடிவில் வழிபட வேண்டும்.
திதி : நவமி
கோலம் : வாசனைப் பொடிகளால் ஆயுதம் போன்ற கோலம் போட வேண்டும்.
பூக்கள் : தாமரை, மருக்கொழுந்து, துளசி, வெள்ளை மலர்கள்.
நைவேத்தியம் : சர்க்கரை பொங்கல், உளுந்து வடை, வேர்க்கடலை, சுண்டல், கடலை, எள் பாயாசம், கேசரி, பொட்டுக்கடலை, எள் உருண்டை.
ராகம் : வசந்த ராக கீர்த்தனம் பாடி தேவியை மகிழ்விக்க வேண்டும்.
பலன் : ஆயுள், ஆரோக்கியம் பெருகும். சந்ததிகள் சவுக்கியமாக இருப்பார்கள்.

பத்தாவது நாள் 
வடிவம் : அம்பிகை. இவளுக்கு விஜயா என்ற பெயரும் உண்டு (ஸ்தூல வடிவம்)
திதி : தசமி
பலன் : புரட்டாசி மாதம் சுக்ல பட்சமியே விஜயதசமி. மூன்று சக்திகளும், தீய சக்தியை அழித்து, வெற்றி கொண்டு அனைவருக்கும் நன்மைகளை அள்ளித்தந்து அருள் பாலிக்கும் சுபநாள். இன்று தொடங்கும் எல்லா காரியங்களும் வெற்றி மீது வெற்றி பெறும்.
நைவேத்தியம் : பால் பாயாசம், காராமணி சுண்டல், இனிப்பு வகைகள். பூக்கள் : வாசனைப் பூக்கள்.

சுண்டல் நிவேதனம் :
நவராத்திரியில், அம்பாளுக்கு விதவிதமான சுண்டல், பாயாச வகைகள் நிவேதனம் செய்யப்படுகிறது. அறிவியல் ரீதியாகவும் இதற்கு காரணம் உண்டு.. தேவர்களுக்கு சிவன், விஷ்ணு அமிர்தம் தந்து, அவர்களை காத்தது போல, பூமி உயிர்வாழ “மழை என்னும் அமிர்தத்தைத் தருகிறார்கள்.

இதனால் பூமி “சக்தி பெறுகிறது. அந்த சக்தி எனும் பெண்ணுக்கு, பூமியில் விளைந்த விதவிதமான தானியங்கள் பக்குவப்படுத்தப்பட்டு நிவேதனம் செய்யப்பட்டது. அதில் சுண்டல் பிரதான இடம் பெற்றது. நவராத்திரி காலமான புரட்டாசி, ஐப்பசியில் அடைமழை ஏற்படும். இதனால் தோல்நோய் போன்றவை அதிகமாகும். இதைப் போக்கும் சக்தி சுண்டலுக்கு உண்டு.

ஜெனனி ஜோதிட மையம்
அஸ்ட்ரோ ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
வாழ்க வளத்துடன்
9444663519

நவராத்திரி ஸ்பெஷல்

தாம்பூலப்பை

இது கீழ்க்கண்ட பொருட்களை உள்ளடக்கியது.

  1. வெற்றிலை
  2. பாக்கு
  3. மஞ்சள், குங்குமம்,
  4. சீப்பு
  5. முகம் பார்க்கும் கண்ணாடி
  6. வளையல்
  7. மஞ்சள் கயிறு
  8. தேங்காய்
  9. பழம்
  10. பூ
  11. மருதாணி
  12. கண் மை
  13. தட்சணை
  14. ரவிக்கைத்துணி அல்லது புடவை.

ஜெனனி ஜோதிட மையம்
அஸ்ட்ரோ ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
வாழ்க வளத்துடன்
9444663519

இதில் ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு அர்த்தம் உண்டு.

தாம்பூலம்
என்பது வெற்றிலை,பாக்குக்கு வழங்கப்படும் பொதுப் பெயர்.

வெற்றிலையில் முப்பெருந்தேவியரும் வாசம் செய்கின்றனர்.

மஞ்சள்,குங்குமம்
மஞ்சள் கயிறு சுமங்கலித் தன்மையை வழங்குகிறது.

சீப்பு
கணவனின் ஆயுளை விருத்தி செய்வதற்காக,

கண்ணாடி கணவனின் ஆரோக்கியம் காக்க

வளையல்
மன அமைதி பெற‌

தேங்காய்
பாவம் நீங்க, ( மட்டைத் தேங்காய் அளிப்பதே சிறந்தது ஆனால் அதை உரிக்கும் எந்திரம் பல வீடுகளில் இல்லாத நிலையில், உரித்ததேங்காய்
கொடுப்பதே நல்லது.)

பழம்
அன்னதானப் பலன் கிடைக்க,

பூ
மகிழ்ச்சி பெருக,

மருதாணி
நோய் வராதிருக்க,

கண்மை
திருஷ்டி தோஷங்கள் அண்டாதிருக்க,

தட்சணை
லக்ஷ்மி கடாக்ஷம் பெருக,

ரவிக்கைத்துணி அல்லது புடவை வஸ்திர தானப் பலன் அடைய‌
வழங்குகிறோம்.

மனிதர்களிடையே பிறர்க்குக் கொடுத்து மகிழும் வழக்கம்
வரவே இம்மாதிரி சம்பிரதாயங்கள் ஏற்பட்டன. காலப் போக்கில் அது ஆடம்பரத்திற்காகவும்தங்கள் வசதியைப் பிறருக்குக் காட்டவும் கொடுப்பதாக மாறி விட்டது சோகமே.

ஜெனனி ஜோதிட மையம்
அஸ்ட்ரோ ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
வாழ்க வளத்துடன்
9444663519

தாம்பூலம் வழங்குவதன் நோக்கம்
அம்பிகையைத் திருப்தி செய்வதற்கே

அனைவருக்கும் தாம்பூலம் வழங்கும் போது அம்பிகையும் ஏதாவது ஒரு ரூபத்தில் வந்து தாம்பூலம் பெற்றுக்கொண்டு
நம்மைவாழ்த்துவாள்.

தேவி எந்த ரூபத்தில் வேண்டுமானாலும் வரலாம்.

நமக்குப் பூக்கள் தரும் பூக்கார அம்மா,
நம் வீட்டுப் பணிப்பெண்,
ஏன், தெருவில் குப்பைகள் சுத்தம் செய்யும் ஊழியர்
இப்படியாராக வேண்டுமானாலும் இருக்கலாம்.

அப்படி இருக்க,
தாம்பூலம் தருவதில் ஜாதி பேதம் பார்ப்பது, தேவியை அவமதிப்பது போலாகும்.

வயதான சுமங்கலிகள்,

பெண்கள்,

குழந்தைகள்
என்பது ஒப்புக்கொள்ளக்கூடிய பிரிவினை.
இது தவிர்த்து,

அந்தஸ்துவேறுபாடு,
பழைய கோபதாபங்கள் இவற்றை மனதில் வைத்துத் தரும் தாம்பூலங்களுக்கு
எந்தப் பலனும் இல்லை.

மேற்குறிப்பிட்ட
எல்லாப் பொருட்களையும் வசதியுள்ளவர் தரலாம்.
இல்லாதோர்
வருந்த வேண்டியதில்லை.

நம் எல்லோர் இதயத்திற்குள்ளும் இருக்கும் தேவி, எல்லாம் அறிவாள்.

தாம்பூலம் கொடுக்கிற சுமங்கலியும் வாங்கும் சுமங்கலியும் இந்த முறைகளை கடைபிடிக்கும் போது மூன்று தேவியரின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.

ஜெனனி ஜோதிட மையம்
அஸ்ட்ரோ ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
வாழ்க வளத்துடன்
9444663519

நவராத்திரி நைவேத்தியம் மற்றும் சுண்டல் பட்டியல்

1-ம் நாள். நைவேத்தியம். வெண்பொங்கல். சுண்டல் வெள்ளை கொண்டகடலை…

2-ம் நாள் நைவேத்தியம். புளியோதரை.
சுண்டல். பயத்தம் பருப்பு…

3-ம் நாள் நைவேத்தியம். சக்கரைப் பொங்கல். சுண்டல். மொச்சை கடலை…

4-ம் நாள் நைவேத்தியம். கதம்பம் சாதம் சுண்டல். பச்சைப் பட்டாணி…

5-ம் நாள் நைவேத்தியம்.
தயிர் சாதம்
சுண்டல் வேர்க்கடலை…

6-ம் நாள் நைவேத்தியம். தேங்காய் சாதம்.
சுண்டல் கடலைப்பருப்பு…

7-ம் நாள் நைவேத்தியம். எலுமிச்சை சாதம். சுண்டல் வெள்ளை பட்டாணி…

8-ம் நாள் நைவேத்தியம். பாயஸம்
சுண்டல் காராமணி…

9-ம் நாள் நைவேத்தியம் அக்கார அடிசல்
சுண்டல் சாதா கொண்ட கடலை…

செவ்வாய் மற்றும் வெள்ளி யன்று புட்டு அல்லது சிவப்பு காராமணி இனிப்பு சுண்டல் செய்யலாம்.

நவராத்திரி பற்றிய 75 அரிய தகவல்கள்

நவராத்திரி காலத்தில் முடிந்தவரை பாராயணம் செய்வது தேவிக்கு அளவில்லாத மகிழ்ச்சியைத் தரும்.

ஜெனனி ஜோதிட மையம்
அஸ்ட்ரோ ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
வாழ்க வளத்துடன்
9444663519

நவராத்திரி பற்றிய 75 சிறு குறிப்புகளை அறிந்து கொள்ளலாம்.

நவராத்திரி பற்றிய 75 சிறு குறிப்புகள் வருமாறு

  1. சோழர் காலத்தில் நவராத்திரி திருவிழா அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டது.
  2. தமிழ்நாட்டில் நவராத்திரி விழா, நாயக்கர் காலம் முதல் மக்கள் கொண்டாடும் 9 நாள் திருவிழாவாக மாறியது.
  3. நவராத்திரி காலத்தில்தான் மக்களிடம் வரி வசூலிக்கும் நடைமுறையை விஜய நகர மன்னர்கள் ஏற்படுத்தினார்கள்.
  4. நவராத்திரி விழாவை பெரிய அரசர்கள் மட்டுமே கொண்டாட உரிமை இருந்தது. ராமநாதபுரம் சேதுபதி மன்னருக்கு முதன் முதலாக நவராத்திரி கொண்டாடும் உரிமையை திருமலை நாயக்கர் வழங்கினார். இதுவே தமிழகத்தில் நவராத்திரி விழா பரவ வழி வகுத்தது.

ஜெனனி ஜோதிட மையம்
அஸ்ட்ரோ ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
வாழ்க வளத்துடன்
9444663519

  1. நவராத்திரி விழா பற்றி தேவி புராணத்தில் மிக விளக்கமாக கூறப்பட்டுள்ளது.
  2. நவராத்திரி நாட்களில் பெண்கள் கன்யா பூஜை செய்வதால் சகல செல்வங்களையும் பெறலாம்.
  3. விஜயதசமி தினத்தன்று பெருமாள் கோவில்களில் வன்னி மரக்கிளையை வைத்து அதில் பெருமாளை எழுந்தருளச் செய்து பூஜை நடத்துவார்கள். இந்த வழிபாட்டில் கலந்து கொண்டால் கிரக தோஷங்கள் விலகி ஓடி விடும்.
  4. நவராத்திரி பண்டிகையை முதன் முதலில் ராமர்தான் கொண்டாடியதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  5. நவராத்திரி நாட்களில் இரவு 7 மணி முதல் 9.30 மணி வரை தேவி வழிபாடு செய்ய உகந்த நேரமாகும்.
  6. ஈசனம், அம்மையும் ஒன்று சேர்ந்து ஊஞ்சலில் ஆடுகின்ற தரிசனத்தை 9 நாட்களும் கண்டால் நவராத்திரி பூஜை செய்த பலன் கிடைக்கும்.
  7. நவராத்திரி நாளில் வரும் சப்தமி திதியன்று வழிபட்டால் ஸ்ரீஹயக்ரிவப் பெருமாளின் அருளைப் பெறலாம். அன்று ஸ்ரீலலிதா சகரஸ்ர நாமத்தையும் நவாக்சரி மந்திரத்தையும் ஓதுவது கூடுதல் பலன்களைத் தரும்.
  8. பிரம்ம நவராத்திரி, கிருஷ்ண நவராத்திரி, ரிஷி நவராத்திரி, தேவ நவராத்திரி, பஞ்ச கல்ப நவராத்திரி, பாக்ய நவராத்திரி, போக நவராத்திரி, தாத்பர்ய நவராத்திரி, சற்குரு நவராத்திரி, தேவதா நவராத்திரி என்று பல வகை நவராத்திரிகள் உள்ளன.
  9. பங்குனி மாதம் அமாவாசைக்குப் பிறகு பிரதமையில் தொடங்கும் லலிதா நவராத்திரி, மாசி மாதம் வரும் ராஜ மாதங்கி நவராத்திரி ஆடியில் வரும் மகாவராகி நவராத்திரி, புரட்டாசியில் வரும் சாரதா நவராத்திரி ஆகிய 4 நவராத்திரிகளையும் பெண்கள் கடைபிடித்தால் அம்பிகையின் அருளை பரிபூரணமாகப் பெறலாம்.
  10. அனைத்திலும் தேவியே உள்ளாள் என்பதை உலகுக்கு உணர்த்தவே நவராத்திரி நாட்களில் கொலு வைக்கப்படுகிறது.

ஜெனனி ஜோதிட மையம்
அஸ்ட்ரோ ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
வாழ்க வளத்துடன்
9444663519

  1. எல்லாரும் புரட்டாசி நவராத்திரியில் மட்டுமே கொலு வைக்கிறார்கள். ஆனால் 4 நவராத்திரி நாட்களிலும் கொலு வைத்தால்தான் அம்பிகை அருள் கிடைக்கும்.
  2. வீட்டில் கொலு வைத்தால், அம்பிகை அனைத்து அம்சமாக நம் வீட்டில் எழுந்தருளி விட்டாள் என்பது நம்பிக்கையாகும்.
  3. ஒரு நவராத்திரிக்கு கொலு வைத்தால் பிறகு வாழ்நாள் முழுவதும் நவராத்திரி நாட்களில் கொலு வைக்க வேண்டும் என்கிறார்கள்.
  4. நவராத்திரி பூஜையை அஸ்தம், சித்திரை அல்லது மூலம் நட்சத்திர நாட்களில் தொடங்குவது நல்லது. இந்த நாட்களில் வைதிருதி யோக நேரம் இருந்தால் மிகவும் நல்லது.
  5. புரட்டாசி மாதத்தை எமனின் கோரை பல் என்று அக்னி புராணம் சொல்கிறது. இந்த மாதம் எமனின் பாதிப்பில் இருந்து தப்பவே நவராத்திரி விழாவாக கொண்டாடப்படுகிறது.
  6. நவராத்திரி பூஜைகள் அனைத்தையும் செய்து சுகன்யா தேவி என்பவள் எல்லா வித பலன்களையும் பெற்றாள்.
  7. விஜய தசமி தினத்தன்று ஸ்ரீஆயுர் தேவியை போற்றி வழிபட வேண்டும். இதுதான் நவராத்திரி பூஜையின் நிறைவான பூஜையாகும்.
  8. நவராத்திரி நாட்களில் பகலில் சிவ பூஜையும் இரவில் அம்பிகை பூஜையும் செய்வதே சரியான வழிபாடாகும்.
  9. நவராத்திரி 9 நாட்களும் தினமும் பகலில் 1008 சிவ நாமாவளிகளை ஜெபித்து வழிபாட்டால் அளவிடற்கரிய பலன்கள் கிடைக்கும்.
  10. நவராத்திரி வழிபாட்டை தினமும் தொடங்கும் போது ஸ்யவன மகரிஷியையும் சுகன்யா தேவியையும் தியானித்தபடியே தினசரி பூஜையை தொடங்க வேண்டும்.

ஜெனனி ஜோதிட மையம்
அஸ்ட்ரோ ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
வாழ்க வளத்துடன்
9444663519

  1. நவராத்திரி நாட்களில் சுண்ணாம்பு மாவினால் கோலம் போடக்கூடாது. அரிசி மாவைப் பயன்படுத்திதான் கோலமிட வேண்டும். அவ்வாறு செய்வதால் குடும்ப ஒற்றுமையும், செல்வமும் வளரும். சுண்ணாம்பு மாவு பயன்படுத்தினாலோ, எதிர்மறையான விளைவுகளே உருவாகும்.
  2. ஒன்பது நாட்களிலும் தேவியாக பாவித்துத் துதிக்க, நமக்குச் சொந்தமல்லாத, பிறர் வீட்டுக் குழந்தையையே அழைத்து வந்து உபசரிக்க வேண்டும். நம் வீட்டு அல்லது நம் உறவினர்களின் குழந்தைகளையே தேர்ந்தெடுப்பது கூடாது.
  3. தினந்தோறும் நவராத்திரி பூஜையின் நிறைவாக, பலவிதமான மங்கலப் பொருட்களை (மஞ்சள், குங்குமம், வளையல், ரிப்பன் போன்றவை) ஏழைகளுக்கு தானமாக அளிக்க வேண்டும்.
  4. தனித்து தானம் செய்வதை விட, சத்சங்கமாகப் பலரும் ஒன்று சேர்ந்து, மங்கலப் பொருட்களை மிகப் பெரிய அளவில் தானமாக அளிப்பதே சிறப்பானது.
  5. தான தர்மங்கள்தான் நவராத்திரி பூஜைகளை நிறைவு செய்ய உதவிகின்றன. ஆகவே நவராத்திரியில் தானமளிப்பதே மிகமிக முக்கியம்.
  6. தென்னகத்தில் இருந்துதான் நவராத்திரிக்குரிய மகிஷாசுரமர்த்தினியின் கதை வங்க நாடு சென்றது.
  7. அந்த காலத்தில் நாடு சீரும் சிறப்பும் அடையவும், செங்கோல் நடக்கவும், செல்வம் கொழிக்கவும் நவராத்திரி விழாவை மக்கள் கொண்டாடினார்கள்.
  8. நவராத்திரி ஒன்பது நாட்களிலும் நாராயணசுக்தம், புருஷசுக்தம், சகஸ்ரநாமம், சுதர்சனமந்திரம், கருடமந்திரம் முதலியவை ஜபரூபமாக முழங்கும்.
  9. கன்னிப் பெண்களுக்குப் புதிய ஆடை முதலியவை பரிசாக அளிக்கப்படவேண்டும் என்பது நவராத்திரி விழாவின் முக்கிய அம்சமாகும்.
  10. நவராத்திரி ஒன்பது நாளும் பூஜையைத் திருமகளே ஏற்றுக் கொள்கிறாள்.

ஜெனனி ஜோதிட மையம்
அஸ்ட்ரோ ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
வாழ்க வளத்துடன்
9444663519

  1. சரஸ்வதி பூஜை என்ன கிழமையானாலும் கடலை சுண்டல் எதுவும் செய்ய முடியாதவர்கள் பழங்கள் கொடுக்கலாம்.
  2. நவதானியச் சுண்டல் நவக்கிரக நாயகர்களைத் திருப்திப்படுத்தும். கோள்களால் வரக்கூடிய துன்பங்களைத் தடுக்கும்.
  3. ஷோடச லஷ்மி பூஜை நவராத்திரி வெள்ளிக்கிழமையில் செய்தால் ஐஸ்வர்யம் பெருகும். இது கிரியா சக்தி வழிபாடு.
  4. நவராத்திரி காலத்தில் முடிந்தவரை பாராயணம் செய்வது தேவிக்கு அளவில்லாத மகிழ்ச்சியைத் தரும்.
  5. அந்த நாளில் கொலுவுக்கு வரும் கன்னியரின் நடையுடை, பாவனை, பேச்சு, பாட்டு, நடந்து கொள்ளும் விதம் இவற்றை முனிவர்கள் தீர்மானித்து தன் மகனுக்கோ, தன் உறவினர் மைந்தனுக்கோ இவள் ஏற்றவள் என்று தீர்மானிப்பர். பல திருமணங்கள் அப்படி முடிவாகி கார்த்திகை அல்லது தையில் நடந்திருக்கின்றன.
  6. குழந்தைகள் பொம்மைகளைப் பார்த்துக் கதை கேட்டால் பொறுமையாக சொல்ல முதலில் நீங்கள் அதை அறிந்து வைத்திருங்கள்! குழந்தைகளின் அறிவையும், பக்தியையும், திறமையையும் கொலு வளர்க்கும்.
  7. கொலு வைப்பதால் பெண்களின் மன இறுக்கம் தளர்ந்து லேசாகிறது.
  8. டெல்லியிலும், காசிக்கு அருகிலுள்ள ராம் நகர் உத்தரபிரதேசம் போன்ற இடங்களிலும் ‘ராம்லீலா நடத்த பெரிய, தனியான திடல்களே உள்ளன. ஸ்ரீராமனது காவியத்தை பத்து அல்லது முப்பது நாட்கள் நாடகமாக நடிக்கின்றனர்.
  9. சிறு துளசிக்கன்றை களிமண்ணோடு கொண்டு வந்து கொலுவில் வைத்து தீபாராதனை காட்டுவது ஆனந்தத்தை அதிகப்படுத்தும்.
  10. நவராத்திரி கடைசி நாளன்று துர்க்கை இமயமலைக்கு திரும்பிச் செல்வதாக ஐதீகம் இருப்பதால் வட மாநிலங்களில் துர்க்கை சிலைகளை கங்கையில் போட்டு விடுவார்கள்.

ஜெனனி ஜோதிட மையம்
அஸ்ட்ரோ ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
வாழ்க வளத்துடன்
9444663519

  1. நவராத்திரி பூஜையின் போது எருமை மாடுகளை பலி கொடுக்கும் வழக்கம் மேற்கு வங்கத்தில் இருந்தது. தற்போது அந்த பழக்கம் ஒழிக்கப்பட்டு விட்டது.
  2. நவராத்திரி விரதம் இருப் பவர்கள் தரையில் தான் படுத்து தூங்க வேண்டும்.
  3. அம்பிகை சங்கீதப் பிரியை. எனவே நவராத்திரி நாட்களில் தினமும் ஏதாவது ஒரு பாட்டாவது பாட வேண்டும்.
  4. வடநாட்டில் ஒரு பிரிவினர் நவராத்திரி 9 நாட்களும் உணவு சாப்பிடாமல் விரதம் இருப்பதுண்டு.
  5. தமிழ்நாட்டில் நவராத்திரி கொலு வைக்கப்படுவது போல ஜப்பானிலும் பொம்மை கொலு வைக்கிறார்கள். நம்மூர் சரசுவதி போல அங்கு பெண்-டென் என்ற தேவதையை வணங்குகிறார்கள். அந்த தேவதையும் சரசுவதி வைத்திருப்பது போல கையில் புத்தகம் வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
  6. சந்திரகுப்தர் ஆட்சிக் காலத்தில் நவராத்திரி விழா ஒரு வீர விழாவாகக் கொண்டாடப்பட்டது.
  7. அக்பர் காலத்தில் தசரா திருவிழா கோலாகல நிலைக்கு மாறியது.
  8. காளியை மேற்கு வங்க மக்கள் மிகவும் ஆத்மார்த்தமாக வழிபடுவதால் அம்மாநில மக்கள் சக்தி வணக்கக்காரர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.
  9. குஜராத்தில் நவராத்திரி 9 நாட்களும் பெண்கள் கும்மியடித்து நடனமாடுவார்கள். இந்த நடனத்துக்கு கரவோ என்று பெயர்.
  10. நவராத்திரி 9 நாட்களும் மகா சக்தியை ஐதீகப்படி வணங்கினால் முக்திப் பேறு உண்டாகும்.

ஜெனனி ஜோதிட மையம்
அஸ்ட்ரோ ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
வாழ்க வளத்துடன்
9444663519

  1. நவராத்திரி கோலத்தை செம்மண் கலந்து போட்டால் அம்பாள் மனமகிழ்ந்து வருவார்.
  2. நவராத்திரி 9 நாட்களும் வாசலில் மாவிலை கட்டி பூஜை செய்தால் ஐஸ்வர்யம் உண்டாகும்.
  3. கொலு வைத்திருப் பவர்கள் அதன் முன் நவக் கிரக கோலம் போட்டால் அம்பாள் அனுக்கிரகமும், நவக்கிரகப் பலன்களும் கிடைக்கும்.
  4. நவராத்திரி 9 நாட்களும் வீட்டுக்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு பரிசுப் பொருட்களுடன் பூந்தொட்டி, புத்தகத்தை தானமாக கொடுக்கும் பழக்கம் கடந்த சில ஆண்டுகளாக சென்னையில் அதிகரித்துள்ளது.
  5. முத்தாலத்தி என்றொரு வகை கோலம் உள்ளது. நவராத்திரி நாட்களில் இந்த வகை கோலம் போட்டால் அம்பாள் அருள் நமக்கு எளிதாக கிடைக்கும்.
  6. நவராத்திரி 9 நாட்களில் வரும் வெள்ளிக் கிழமையன்று 5 சுமங்கலி பெண்களுக்கு அன்னதானம் செய்து புடவை மற்றும் தாம்பூலம் கொடுத்து ஆசி பெற்றால் உடனடியாக திருமணம் கைகூடும்.
  7. நவராத்திரி 5-ம் நாள் லலிதாம்பிகையின் அவதார தினமாக கொண்டாடப்படுகிறது. அன்று 9 சிறுமிகளுக்கு பட்டுப்பாவாடை தானம் செய்தால் நினைத்தது நடக்கும்.
  8. நம்மூரில் முளைப்பாரி வைப்பது போல மராட்டி யத்தில் நவராத்திரி முதல் நாளன்று நவதானி யங்களை மண் கலசங்கில் வளர்ப்பார்கள். விஜயத சமியன்று அவற்றை ஊர் வலமாக எடுத்து சென்று ஆறுகளில் கரைத்து விடுவார்கள்.
  9. உடுப்பி கிருஷ்ணருக்கு நவராத்திரி 9 நாட்களும் சேலை கட்டி சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்.
  10. நவராத்திரி 9 நாட்களும் சர்க்கரைப் பொங்கல், உளுந்து வடை, நைவேத்தியம் செய்தால் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.

ஜெனனி ஜோதிட மையம்
அஸ்ட்ரோ ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
வாழ்க வளத்துடன்
9444663519

  1. நவராத்திரி தொடர்பான சுலோகம் மந்திரம் தெரியவில்லையா? கவலை படாதீர்கள் ஓம் ஸ்ரீ லலிதா தேவியே நம என்பதை 108 தடவை சொன்னாலே போதும். உரிய பலன் கிடைக்கும்.
  2. நெமிலியில் திரிபுர சுந்தரி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒரு நவராத்திரிக்கு கலசத்தில் வைக்கப் படும் தேங்காய் அடுத்த ஆண்டு நவராத்திரி வரை கெடாமல் இருக்கும்.
  3. தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோவிலில் முப்பெரும் தேவியர் இணைந்த அர்த்த நாரீஸ்வர துர்க்கை உள்ளது. 3 தலை, 8 கைகளுடன் இந்த துர்க்கை காணப்படு கிறார்.
  4. கும்பகோணம் அருகில் உள்ள தேனுபுரீஸ்வரர் கோவிலில் விஷ்ணு துர்க்கை எனப்படும் அஷ்ட புக துர்க்கா தேவி அருள்புரிகிறாள். 8 கரங்களுடன் உள்ள இந்த துர்க்கையின் ஒரு கையில் கிளி இருப்பது தனிச் சிறப்பாகும்.
  5. நவராத்திரி நாட்களில் முப்பெரும் தேவியரின் கதைகளை கேட்டால் அம்மைநோய் தாக்காது என்பது நம்பிக்கை.
  6. சுகமான வாழ்வு வேண்டும், கல்வியில் சிறந்து விளங்க வேண்டும், அரசியலிலும், வேலையிலும் பதவி தொடர வேண்டும், எந்த தொழிலில் ஈடுபட்டாலும் வெற்றி மீது வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் நவராத்திரி பூஜையை அவசியம் செய்ய வேண்டும்.
  7. ராமபிரான் நவராத்திரி விரதத்தை கடைபிடித்த பிறகுதான் அவருக்குச் சீதை இருக்குமிடம் தெரிந்தது என்று தேவி பாகவதம் சொல்கிறது.
  8. ஜனமேஜயன் நடத்திய சர்ப்ப யாகத்திலிருந்து நாகங்களை மானசாதேவி காப்பாற்றியதால் அவள் நாகேஸ்வரி என்று அழைக்கப்படுகிறாள். இவள் குருவான ஈஸ்வரரிடமிருந்து சித்தயோகத்தை கற்றதால் சித்தயோகினி என்ற நாமத்தைப் பெற்றாள். இவளது கணவர் ஜரத்காரு. நவராத்திரி காலத்தில் இவள் கதை பகுதியைச் சொல்லி அர்ச்சிப்பதால் ராகு, கேது தோஷம், கால சர்ப்ப தோஷம் நீங்குகிறது.
  9. கொலு பொருட்களை பாதுகாக்க வேண்டியது முக்கியம். அவைகளில் மந்திர ஆவர்த்தி இருக்கும்.
  10. தேவியை நவராத்திரி சமயத்தில் ஒன்பது மடங்கு அதிகமாகப் பூஜிக்க வேண்டும் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.
  11. எல்லாவற்றிற்கும் மேலானது சண்டிஹோமம். சண்டி என்பவள் மூன்று சக்திகளும் ஒன்றிய வடிவம். முப்பெரும் தேவியரையும் ஒன்றாக இணைத்து வழிபடுவதே இந்த ஹோமத்தின் சிறப்பு. விஜயதசமி நாளில் இதைச் செய்வதால் மிக நல்ல பலன்கள் பெறலாம்.

ஜெனனி ஜோதிட மையம்
அஸ்ட்ரோ ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
வாழ்க வளத்துடன்
9444663519

Related Posts