இல்லற தர்மம்

ஜெனனி ஜோதிட மையம்
அஸ்ட்ரோ ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
வாழ்க வளத்துடன்
9444663519

இல்லற தர்மம்

கட்டிய துணைவரையும் கட்டிய துணைவியையும் கடைசி வரை கண் கலங்காமல் காப்பவர்கள் தவம் செய்ய தேவையில்லை

இருபத்தியொரு வயது வரை யாருக்கும் சொந்த ஆன்மா வினை செயலுக்கு வராது

அந்த ஆன்மாவின் உள் மூலம் தாய் தந்தை வினையே வழி நடத்தும்.

96 தத்துவங்கள் முடிவு பெறுவது 21 வயதிலே

அதன் பிறகே சொந்த வினையானது அவர் அவர்க்கு செயலில் இறங்கும்

ஜெனனி ஜோதிட மையம்
அஸ்ட்ரோ ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
வாழ்க வளத்துடன்
9444663519

சிவமாக இருந்தால் மட்டும் சிரசு ஏற முடியாது

சக்தியோடு துணை சேர வேண்டும்.

த்யான மூலம்
பக்தி மூலம்
ஞான மூலம்
யோக மூலம்
தீட்சை மூலம்
சிவசக்தி மூலம்
என சிரசு ஏற பல வழிகள் உள்ளது.

ஆனால் சிறந்த மூலம்
இல்லற தர்மம் ஒன்றே

சிவம் பிறக்கையிலே சக்தி பிறந்து விடுகிறது

உடல் பொருத்தம் பூமியில் ஜெயிப்பதில்லை

ஆன்ம பொருத்தமே பிறவியை ஜெயிக்கும்.

அப்பேற்பட்ட சக்தியோடு சிவம் சேரும் போது சிவனோடு சக்தி சேரும் போது அனைத்தும் அமைதியாகும்

சிவசக்தி சங்கமத்தில் சக்திசிவம் சங்கமத்தில் ஊடலும் கூடலும் உற்சாகம்தானே.

ஜெனனி ஜோதிட மையம்
அஸ்ட்ரோ ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
வாழ்க வளத்துடன்
9444663519

துணைவர்/துணைவியர்
கண்ணீர் துளிகளுக்கு யார் காரணமானால் அதை விட கொடிய வினை உலகில் இல்லை

ஒருவன் வாழ்வை ஜெயிக்க ஆயிரம் வழிகள்
தர்மத்தில் உள்ளது உண்மையே.

ஆனால் உறவுகளைக் கொண்டே உலகம் தன்னை வெல்வதும் பிறவிப்பிணி அறுக்கவும் உலகம் அறியாத ஒரு வழி உள்ளது.

சொந்தம் என்பது பழைய பாக்கி என்பதை அறிந்தவனுக்கு சொந்தம் ஒரு சுமை இல்லை.

நட்பு என்பது பழைய பாக்கி
என்பதை பண்போடு அறிந்தவனுக்கு பதற்றம் இல்லை.

எதிரி என்பவன் தன் வினையின் தார்மீக கணக்கே
என தனித்தன்மையோடு உணர்ந்தவனுக்கு எதிரி இல்லை

நமக்கு எதிரியும் நாமே
நமக்கு நாமே தான் எதிரி

ஜெனனி ஜோதிட மையம்
அஸ்ட்ரோ ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
வாழ்க வளத்துடன்
9444663519

நமது செயலே வினையாகி அந்த வினையே நமக்கே எதிரி என நினைக்கும்.

நம் எதிரி முகத்தில் நமது வினையே நம் கண்களுக்கு தெரியவந்தால்

*எதிரி நமக்கு எதிரே இருந்தாலும் கலக்கம் தேவைப்படுவதில்லை

நம்மை உடனிருந்தே கொல்லும் உறவும் நம்மோடு பிறக்கும்

பழைய கணக்காய்.
பழைய கணக்கு புரிந்தால் பந்தபாசம் சகோதரத்துவம் மீது பற்றற்ற பற்று வைத்து பிறவி கடனை வெல்லலாம்.

வினையின் கணக்கு புரிந்தால் நமக்கு பக்கத்தில் சரிபாதி அமரும் துணைவரும் துணைவியாரும் யார் என்று நமக்கு புரியும்

தாய் தந்தையரை அன்போடு காப்பவன் தந்தை வழி தாயார் வழி ஏழேழு ஜென்ம வினையிலிருந்து இருந்து தப்பிக்கலாம்

எந்தவொரு எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் உறவுகள் மூலம் வரும் இன்னல்கள் பொருத்து உபகாரமாக உதவி வந்தால்
நமது ஏழேழு ஜென்மத்து சமுதாய வினையில் இருந்து தப்பிக்கலாம்

ஜெனனி ஜோதிட மையம்
அஸ்ட்ரோ ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
வாழ்க வளத்துடன்
9444663519

சாமியார்களை தரிசனம் செய்வதாலோ

திருக்குளத்தில் புண்ய நீராடுவதாலோ

நம் வாழ்க்கையில் ஒன்றும் மாறாது

சிறிது காலம் சிறு இன்பம் மட்டும் கிடைக்கும்.

ஆனால் ஒரேயொரு உறவை நாம் பூஜித்தால் பிறவிப்பிணி இன்னல் மொத்தமாய் தீரும்

அது அந்த புனிதமான உறவு
நம் அன்பு துணைவரும்
நம் அன்பு துணைவியரும்.

உலகிலேயே துணைவர் துணைவியையும்
துணைவி துணைவரையும் மகிழ்ச்சியாக வைப்பது சிரமம் மட்டும் அல்ல

அதுதான் உலகிலேயே தலைசிறந்த தவம்

தவம் என்பது சாமான்யர்களுக்கு சிரமமே.

தாலி கட்டிய மனைவியின் மூலம் கரம் பிடித்த துனைவரின் மூலம்

பெற்ற பிள்ளைகளையும் உளமாற நேசித்து உன்னதமாக நமது வாழ்வை ஆனந்தமாக நாம் அர்ப்பணித்தால்

அதுவே உலகின் தலைசிறந்த தர்மம் சிறந்த தவம் ஆகும்.

ஜெனனி ஜோதிட மையம்
அஸ்ட்ரோ ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
வாழ்க வளத்துடன்
9444663519

தினமும் தன் தாய் தந்தையரை போற்றி காப்பவன்
பித்ருதோஷம் நீங்க இராமேஸ்வரம் போக தேவையில்லை.

தன் உற்றார் உறவினர்களை மதிப்பவன்
கிரகதோஷம் நீங்க திருவண்ணாமலை சென்று கிரிவலமோ இடைக்காடரை தேட தேவையில்லை

கிரஹங்களை தேடி தேடி சுற்ற தேவையில்லை.

கட்டிய துணைவர்/ துணைவியின் மூலம் பெற்றெடுத்தகுழந்தைகளை அன்போடு நேசித்து
அவர்களை ஒரு கஷ்டமும் இல்லாமல் ஆனந்தமாக வைத்திருப்பவர்கள்

வினையை தீர்க்க விமோசனம் தேடி பாபநாசம் சென்று அகத்திய முனிவரை தேட தேவையில்லை

இதற்காகத்தான் தமிழ் முப்பாட்டன்
இல்லற வாழ்க்கை மூலம் அமைத்தான் ஆதியோக வம்சத்தை.

துணைவரோ துணைவியோ அழும் இல்லம் நரகம்

துணைவர்/துணைவி சிரிக்கும் இல்லம் சொர்க்கம்.

நம் இல்லம் நரகமா சொர்க்கமா என்பதை நாம் தான் தீர்மானிக்க வேண்டும்.

சக்தியை சிவன் உணர்ந்தாலே

சிவனை சக்தி உணர்ந்தாலே போதும்

அங்கு சிவமும் சக்தியும் சிவ ஜோதியாக ஜொலிக்கும்

ஜெனனி ஜோதிட மையம்
அஸ்ட்ரோ ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
வாழ்க வளத்துடன்
9444663519

Related Posts