ஜென்ம நட்சத்திரம்

ஜெனனி ஜோதிட மையம்
அஸ்ட்ரோ ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
வாழ்க வளத்துடன்
9444663519

ஜென்ம நட்சத்திரம்

நாம் பிறக்கும் போது நம்முடைய நட்சத்திரம் எதுவோ அதுவே நம்முடைய ஜென்ம நட்சத்திரம்.

ஒவ்வொரு ராசிக்கும், நட்சத்திரத்திற்கும் அதற்கான ஒவ்வொரு அதிபதிகள் உள்ளனர்.

அப்படி
நம் ஜென்ம நட்சத்திரத்திற்கு யார் அதிபதியோ அவர் நம் உடலை இயக்குவார்.

உதாரணமாக ஒருவர் அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தால் அந்த நட்சத்திரத்தின் அதிபதி கேது அவரை இயக்குவார்

நம் வினைக்கு ஏற்றவாறு நம் உடல் அனுபவிக்கும் நன்மைகள் மற்றும் தீமைகளுக்கு காரணமாக திகழ்பவர் இந்த ஜென்ம நட்சத்திர அதிபதிதான்

நாம் தற்போது கொண்டாடும் பிறந்த நாள் விழா ஆங்கிலேயர்கள் முறைப்படி ஒவ்வொரு ஆண்டின் அதே தேதியில் கொண்டாடி வருகின்றோம்.

ஆனால்
நாம் தமிழ் மாதத்தில் எந்த நட்சத்திரத்தில் பிறந்தோமோ அதே நட்சத்திரம் BIRTH STAR DAY அன்று பிறந்தநாள் கொண்டாடி இறைவனை தரிசிப்பதுதான் சரியானது.

இதை பெரும்பாலானவர் சரியாக கடை பிடிக்க முடியாது என்பதால்தான் ஆங்கில தேதியை பொதுவானதாக எல்லோரும் எடுத்து கொள்கிறார்கள்.
இருந்தாலும் ஜென்ம நட்சத்திர நாளில் ஆலயம் செல்வது சாலவும் நன்று.

ஜெனனி ஜோதிட மையம்
அஸ்ட்ரோ ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
வாழ்க வளத்துடன்
9444663519

ஆலய வழிபாடு செய்வதற்கு ஒவ்வொரு மாதத்தில் வரும் அவரின் ஜென்ம நட்சத்திரத்தில் செய்வது மிகவும் சிறப்பானது.

ஒவ்வொரு மாதமும் வரும் உங்களுக்கான நட்சத்திரத்தில் கோயிலுக்குச் சென்று இறைவனை வழிபட்டு, அர்ச்சனை செய்வதன் மூலம் உங்களின் கர்ம வினைகளை பெருமளவு குறைக்க முடியும்.

ஜென்ம நட்சத்திரத்தில் ஒருவர் கோயிலுக்கு சென்று இறைவனை வழிபட்டால், அவருக்கு கண்டிப்பாக அவருக்கு அருள் கிடைத்து துன்பம் விலகி இன்பம் பெருகும்.

இதுதான் பிரபஞ்ச ரகசியமாகும்.

ஜெனனி ஜோதிட மையம்
அஸ்ட்ரோ ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
வாழ்க வளத்துடன்
9444663519

Related Posts