விரதமாவது

ஜெனனி ஜோதிட மையம்
அஸ்ட்ரோ ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
வாழ்க வளத்துடன்
9444663519

விரதமாவது

மனம் பொறி வழி போகாது நிற்றற்பொருட்டு உணவை விடுத்தேனுஞ் சுருக்கியேனும் மனம் வாக்குக் காயம் என்னும் மூன்றினாலுங் கடவுளை விதிப்படி மெய்யன்போடு விசேஷமாக வழிபடுதல்.

சிவ விரதம்

சிவ விரதம் எத்தனை

1.சோமவார விரதம்,
2.திருவாதிரை விரதம்,
3.உமாமகேசர விரதம்,
4.சிவராத்திரி விரதம்,
5.கேதார விரதம்,
6.கலியாணசுந்தர விரதம்,
7.சூல விரதம்,
8.இடப விரதம்
என எட்டும்

9.பிரதோஷ விரதமும் சிவ விரதமே.

1.சோமவார விரதமாவது

கார்த்திகை மாச முதற் சோமவாரந் தொடங்கிச் சோமவாரந்தோறுஞ் சிவபெருமானைக் குறித்து கடைபிடிக்கும் விரதம்

உணவு சாப்பிடாமல் இருப்பது நல்லது

முடியாதவர் ஒரு பொழுது இரவிலே உணவு சாப்பிடலாம்.

அதுவும் முடியாதவர் ஒரு பொழுது பகலிலே பதினைந்து நாழிகையின் பின் ஏதாவது சாப்பிடலாம்.

இவ்விரதம் வாழ்நாளாயினும்,

பன்னிரண்டு வருஷ காலமாயினும்,

மூன்று வருஷ காலமாயினும்,

ஒரு வருஷ காலமாயினும்,
கடைபிடித்தல் வேண்டும்.

பன்னிரண்டு மாசத்திலும் இயலாதவர் கார்த்திகை மாசத்தில் மாத்திரமேனும் கடைபிடிக்கலாம்.
(விரதம் – உணவின்றியிருத்தல்).

2.திருவாதிரை விரதமாவது.

மார்கழி மாசத்துத் திருவாதிரை நக்ஷத்திரத்திலே சிவனை குறித்து கடைபிடிக்கும் விரதம்

இதில் விரதம் இருத்தல் வேண்டும்.

இவ்விரதஞ் சிதம்பரத்தில் இருந்து கடைபிடிப்பது மிகவும் நல்லது

3.உமாமகேசுர விரதமாவது.

கார்த்திகை மாசத்துப் பெளர்ணிமியிலே உமாமகேசுர மூர்த்தியைக் குறித்து கடைபிடிக்கும் விரதம்

இதில் ஒருபொழுது பகலிலே சாப்பிடலாம்.
இரவிலே பலகாரம், பழம் சாப்பிடலாம்.

4.சிவராத்திரி விரதமாவது.

மாசிமாசத்துக் கிருஷ்ணபக்ஷ சதுர்த்தசி திதியிலே சிவபெருமானைக் குறித்து கடைபிடிக்கும் விரதம்

இதில், உணவு சாப்பிடாமல் இருந்து நான்கு யாமமும் தூக்கம்யின்றிச் சிவபூசை செய்தல் வேண்டும்.

நான்கு யாம பூசையும் அவ்வக் காலத்திற் செய்வது நல்லது.

ஒரு காலத்திற் சேர்த்துச் செய்வது நல்லது.

பரார்த்தம்,
ஆன்மார்த்தம்
என்னும் இரண்டினும், சிவராத்திரி,
நான்கு யாம பூசையிலே சூரிய தேவர் முதலிய பரிவாரங்களுக்குஞ் சோமாஸ் கந்தமூர்த்தி முதலிய மூர்த்திகளுக்கும் பூசை செய்ய வேண்டியதில்லை.

பரார்த்தத்திலே மகாலிங்கம் முதலிய மூலமூர்த்திகளுக்கும் ஆன்மார்த்தத்திலே மகாலிங்கத்துக்கும் மாத்திரம் பூசை செய்யக்கூடியது
பரார்த்தம்,
ஆன்மார்த்தம்
என்னும்
இரண்டினும்
விநாயகக் கடவுளுக்கு மாத்திரம் நான்கு யாமமும் பூசை செய்யலாம்.

சண்டேசுர பூசை
நான்கு யாமமுஞ் செய்தல் வேண்டும்.

சிவ பூசையில்லாதவர், தூக்கம்யின்றி ஸ்ரீபஞ்சாக்ஷர செபமுஞ் சிவபுராண சிரவணமுஞ் செய்து,
நான்கு யாமமுஞ் சிவாலய தரிசனம் பண்ணல் வேண்டும்.

இதில் விரதம் இருப்பது நல்லது
நீரேனும்
பாலேனும்
சாப்பிடுவது நல்லது

பழம் தோசை முதலிய பலகாரம் சாப்பிடுவது தவிர்க்கவும்

சிவராத்திரி தினத்திலே இராத்திரியிற் பதினான்கு நாழிகைக்கு மேல் ஒரு முகூர்த்தம் லிங்கோற்பவ காலம்.

நான்கு யாமமும் தூக்கத்தை யொழிக்க இயலாதவர், இலிங்கோற்பவ காலம் நீங்கும் வரையுமாயினும் தூக்கத்தை யொழித்தல் வேண்டும்.

இக்காலத்திலே சிவ தரிசனஞ் செய்வது மிகவும் நல்லது புண்ணியம்.

இச்சிவராத்திரி விரதஞ் சைவசமயர்கள் யாவராலும் அவசியம் கடைபிடிக்கத் தக்கது.

5.கேதார விரதமாவது.

புரட்டாதி மாசத்திலே சுக்கிலபக்ஷ அட்டமி முதற் கிருஷ்ணபக்ஷ சதுர்த்தசி யீறாகிய இருபத்தொரு நாளாயினும்,

கிருஷ்ணபக்ஷப் பிரதமை முதற் சதுர்த்தசி யீறாகிய பதினான்கு நாளாயினும்,

கிருஷ்ண்பக்ஷ அட்டமி முதற் சதுர்த்தசி யீறாகிய ஏழு நாளாயினும்,

கிருஷ்ணபக்ஷ சதுர்த்தசியாகிய ஒரு நாளாயினுங் கேதாரநாதரைக் குறித்து கடைபிடிக்கும் விரதம்

இதில் இருபத்தோரிழையாலாகிய காப்பை ஆடவர்கள் வலக்கையிலும்

பெண்கள் இடக்கையிலுங் கட்டிக் கொண்டு,

முதலிருபது நாளும் ஒவ்வொரு பொழுது சாப்பிட்டு,

இறுதி நாளாகிய சதுர்த்தசியிலே கும்ப ஸ்தாபனம் பண்ணிப் பூசை செய்து, விரதம்யிருத்தல் வேண்டும்.

விரதம்யிருக்க இயலாதவர் கேதார நாதருக்கு நிவேதிக்கப்பட்ட உப்பில்லாப் பலகாரம் சாப்பிடலாம்.

6.கலியாணசுந்தர விரதமாவது.

பங்குனி மாசத்து உத்தர நக்ஷத்திரத்திலே கலியாண சுந்தரமூர்த்தியைக் குறித்து கடைபிடிக்கும் விரதம்

இதில் ஒருபொழுது இரவிலே பரமான்னமும் பழமும் சாப்பிட வேண்டும்.

7.சூல விரதமாவது.

தை அமாவாசையிலே இச்சா ஞானக் கிரியா சத்தி வடிவாகிய சூலாயுதத்தைத் தரித்த சிவபெருமானைக் குறித்து கடைபிடிக்கும் விரதம்

இதில் ஒருபொழுது பகலிலே உணவு சாப்பிடலாம்.
இராத்திரியில் ஒன்றும் சாப்பிடலாகாது.

8.இடப விரதமாவது.

வைகாசி மாசத்துச் சுக்கிலபக்ஷ அட்டமியிலே இடப வாகனாரூடராகிய சிவபெருமானைக் குறித்து கடைபிடிக்கும் விரதம்.

இதில் ஒரு பொழுது பகலிலே சாப்பிட வேண்டும்.

9.பிரதோஷ விரதமாவது.

சுக்கிலபக்ஷங் கிருஷ்ணபக்ஷம் என்னும் இரண்டுபக்ஷத்தும் வருகின்ற திரியோதசி திதியிலே, சூரியாஸ்தமனத்துக்கு முன் மூன்றே முக்கால் நாழிகையும் பின் மூன்றே முக்கால் நாழிகையுமாய் உள்ள காலமாகிய பிரதோஷ காலத்திலே, சிவபெருமானைக் குறித்து கடைபிடிக்கும் விரதம்

இவ்விரதம் ஐப்பசி, கார்த்திகை, சித்திரை, வைகாசி என்னும் நான்கு மாசங்களுள் ஒன்றிலே,
சனிப் பிரதோஷம் முதலாகத் தொடங்கி, கடைபிடித்தல் வேண்டும்.

பகலிலே சாப்பிடாமல் இருந்து
சூரியன் அஸ்தமிக்க நான்கு நாழிகை இருக்கும் போது குளித்து,
சிவபூசை பண்ணித் திருக்கோயிலிற் சென்று சிவதரிசனஞ் செய்து கொண்டு

பிரதோஷ காலங் கழிந்தபின் சிவனடியாரோடு சாப்பிட வேண்டும்.

பிரதோஷ காலத்திலே நியமமாக மெய்யன்போடு சிவதரிசனஞ் செய்து கொண்டுவரின்
கடன்
வறுமை
நோய்
பயம்
அவமிருந்து மரணவேதனை
பாவம் என்னும் இவைகளெல்லாம் நீங்கும்.

அஸ்தமனத்துக்கு முன் மூன்றே முக்கால் நாழிகையே சிவதரிசனத்துக்கு உகந்த காலம்.

ஜெனனி ஜோதிட மையம்
அஸ்ட்ரோ ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
வாழ்க வளத்துடன்
9444663519

தேவி விரதம்

10.தேவி விரதம் எத்தனை

சுக்கிரவார விரதம்
ஐப்பசி உத்திர விரதம்
நவராத்திரி விரதம்
என மூன்றும்

11.சுக்கிரவார விரதமாவது.

சித்திரை மாசத்துச் சுக்கிலபக்ஷத்து முதற் சுக்கிரவாரந் தொடங்கிச் சுக்கிரவாரந்தோறும் பார்வதி தேவியாரைக் குறித்து கடைபிடிக்கும் விரதம்

இதில் ஒருபொழுது பகலிலே உணவு உண்ண வேண்டும்.

12.ஐப்பசி உத்திர விரதமாவது.

ஐப்பசி மாசத்து உத்தர நக்ஷத்திரத்திலே பார்வதி தேவியாரைக் குறித்து கடைபிடிக்கும் விரதம்

இதில் ஒரு பொழுது பகலிலே உணவு உண்ண வேண்டும்.

13.நவராத்திரி விரதமாவது

புரட்டாசி மாசத்துச் சுக்கிலபக்ஷப் பிரதமை முதல் நவமி யீறாகிய ஒன்பது நாளும் பார்வதி தேவியாரைக் கும்பத்திலே பூசை செய்து கடைபிடிக்கும் விரதம்

இதிலே
முதலெட்டு நாளும்
பலகாரம்
பழம்
முதலியவை உட்கொண்டு, மகாநவமியில் விரதம் இருத்தல் வேண்டும்.

ஜெனனி ஜோதிட மையம்
அஸ்ட்ரோ ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
வாழ்க வளத்துடன்
9444663519

விநாயக விரதம்

14.விநாயக விரதம் எத்தனை

சுக்கிரவார விரதம்,
விநாயக சதுர்த்தி விரதம்,
விநாயக சட்டி விரதம் என மூன்றும்

15.சுக்கிரவார விரதமாவது

வைகாசி மாசத்துச் சுக்கிலபக்ஷத்து முதற் சுக்கிரவாரந் தொடங்கிச் சுக்கிரவாரந்தோறும் விநாயகக் கடவுளைக் குறித்து கடைபிடிக்கும் விரதம்
இதிலே பழம் முதலியன இரவில் சாப்பிடவேண்டும்.

16.விநாயக சதுர்த்தி விரதமாவது

ஆவணி மாசத்துச் சுக்கிலபக்ஷ சதுர்த்தியிலே விநாயகக் கடவுளைக் குறித்து கடைபிடிக்கும் விரதம்

இதில் ஒருபொழுது பகலிலே சாப்பாடு உண்டு,
இரவிலே பழமேனும் பலகாரமேனும் சாப்பிடவேண்டும்.
இத்தினத்திலே சந்திரனைப் பார்க்கலாகாது.

17.விநாயக சஷ்டி விரதமாவது.

கார்த்திகை மாசத்துக் கிருஷ்ணபக்ஷப் பிரதமை முதல் மார்கழி மாசத்துச் சுக்கிலபக்ஷ சஷ்டியீறாகிய இருபத்தொரு நாளும் விநாயகக் கடவுளைக் குறித்து கடைபிடிக்கும் விரதம்

இதில் இருபத்தோரிழையாலாகிய காப்பை ஆடவர்கள் வலக்கையிலும்

பெண்கள் இடக்கையிலுங் கட்டிக் கொண்டு,

முதலிருபது நாளும் ஒவ்வொரு பொழுது உணவு உட்கொண்டு
இறுதி நாளாகிய சஷ்டியில் விரதம் இருத்தல் வேண்டும்.

ஜெனனி ஜோதிட மையம்
அஸ்ட்ரோ ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
வாழ்க வளத்துடன்
9444663519

சுப்பிரமணிய விரதம்

19.சுப்பிரமணிய விரதம் எத்தனை

சுக்கிரவார விரதம்,
கார்த்திகை விரதம்,
கந்தசஷ்டி விரதம்
என மூன்றும்

20.சுக்கிரவார விரதமாவது

ஐப்பசி மாசத்து முதற் சுக்கிரவாரந் தொடங்கிச் சுக்கிர வாரந்தோறும் சுப்பிரமணியக் கடவுளைக் குறித்து கடைபிடிக்கும் விரதம்

இதில் விரதம் இருப்பது நல்லது.

முடியாதவர் இரவிலே பழம் முதலியன சாப்பிடலாம்

அதுவுங் முடியாதவர் ஒரு பொழுது பகலிலே சாப்பிடலாம்.

இவ்விரதம் மூன்று வருஷ காலம் கடைபிடித்தல் வேண்டும்.

21.கார்த்திகை விரதமாவது

கார்த்திகை மாசத்துக் கார்த்திகை நக்ஷத்திரம் முதலாகத் தொடங்கிக் கார்த்திகை நக்ஷத்திரந் தோறுஞ் சுப்பிரமணியக் கடவுளைக் குறித்து கடைபிடிக்கும் விரதம்.

இதில் விரதம் இருக்கலாம்.

முடியாதவர்கள்பழம் முதலியன இரவில் சாப்பிடலாம்.

இவ்விரதம் பன்னிரண்டு வருஷ காலம் கடைபிடித்தல் வேண்டும்.

22.கந்த சஷ்டி விரதமாவது

ஐப்பசி மாசத்துச் சுக்கிலபக்ஷப் பிரதமை முதற் சஷ்டியீறாகிய ஆறு நாளுஞ் சுப்பிரமணியக் கடவுளைக் குறித்து கடைபிடிக்கும் விரதம்.

இதில் ஆறு நாளும் விரதம் இருப்பது நல்லது.

முடியாதவர்கள் முதலைந்து நாளும் ஒருவேளை சாப்பிட்டு

சஷ்டி
சஷ்டியில் முழுநேரம் விரதம் இருக்கலாம்.

இவ்விரதம் ஆறு வருஷ காலம் கடைபிடித்தல் வேண்டும்.

மாசந்தோறும் சுக்கிலபக்ஷ
சஷ்டியிலே சுப்பிரமணியக் கடவுளை வழிபட்டு,
மா
பழம்
பால்
பானகம்
மிளகு
என்பவைகளுள் இயன்றது ஒன்று உட்கொண்டு வருவது நல்லது.

ஜெனனி ஜோதிட மையம்
அஸ்ட்ரோ ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
வாழ்க வளத்துடன்
9444663519

வைரவ விரதம்

23.வைரவ விரதம் எத்தனை

மங்கலவார விரதம்,
சித்திரைப் பரணி விரதம்,
ஐப்பசிப் பரணி விரதம் என மூன்றும்.

  1. மங்கல வார விரதமாவது

தை மாசத்து முதற் செவ்வாய்க்கிழமை தொடங்கிச் செவ்வாய்க்கிழமை தோறும் வைரவக் கடவுளைக் குறித்து கடைபிடிக்கும் விரதம்.

இதில் ஒரு பொழுது பகலிலே பழமேனும் பலகாரமேனும் அன்னமேனும் உட்கொள்ளல் வேண்டும்.

  1. சித்திரை பரணி விரதமாவது

சித்திரை மாசத்துப் பரணி நஷத்திரத்திலே வைரவக் கடவுளைக் குறித்து கடைபிடிக்கும் விரதம்.

இதிலும் ஒரு பொழுது பகலிலே பழமேனும் பலகாரமேனும் அன்னமேனும் உட்கொள்ளல் வேண்டும்.

  1. ஐப்பசிப் பரணி விரதமாவது

ஐப்பசி மாசத்துப் பரணி நக்ஷத்திரத்திலே வைரவக் கடவுளைக் குறித்து கடைபிடிக்கும் விரதம் .

இதிலும் ஒரு பொழுது பகலிலே பழமேனும் பலகாரமேனும் அன்னமேனும் உட்கொள்ளல் வேண்டும்.

ஜெனனி ஜோதிட மையம்
அஸ்ட்ரோ ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
வாழ்க வளத்துடன்
9444663519

வீரபத்திர விரதம்

  1. வீரபத்திர விரதம் எத்தனை

மங்கலவார விரதம் என ஒன்றேயாம்

  1. மங்கலவார விரதமாவது

செவ்வாய்க்கிழமை தோறும் வீரபத்திரக் கடவுளைக் குறித்து கடைபிடிக்கும் விரதம்.

இதில் ஒரு பொழுது பகலிலே போசனஞ் செய்தல் வேண்டும்.

  1. விரதம் கடைபிடிப்பவர் அவ்விரத தினத்தில் எவ்வெவைகளை நீக்கி எவ்வெவைகளைச் செய்தல் வேண்டும்.

காமங்
கோபம் முதலிய குற்றங்களெல்லாவற்றையும் பற்றறக் களைதல் வேண்டும்;
தவறாது வைகறையிலே நித்திரை விட்டெழுந்துவிடல் வேண்டும்.

புண்ணிய தீர்த்தத்தை அடைந்து,
விபூதி,
வில்வத்தடி மண், தருப்பை,
கோமயம்,
திலகம்
என்பவைகளைச் சிரசிலே வைத்துக் கையிலே
பவித்திரஞ் சேர்த்துச், சங்கற்பஞ் சொல்லி, குளிக்க வேண்டும்.
தியானம்,
செபம்,
பூசை,
ஆலய தரிசனம், பிரதக்ஷிணம்,
புராண சிரவணம் முதலியன விசேஷமாகச் செய்தல் வேண்டும்.

திருகோயிலிலே இயன்றமட்டும் நெய் விளக்கேற்றல் வேண்டும்.

அபிஷேகத் திரவிய நைவேத்தியத் திரவியங்கள் கொடுத்தல் வேண்டும்.

போசனம் பண்ணுமிடத்துச் சிவனடியர் ஒருவரோடாயினும் போசனம் பண்ணல் வேண்டும்.

நித்திரை செய்யுமிடத்து, இரவிலே, கோமயத்தினாலே மெழுகப்பட்ட தரையிலே, தருப்பையின் மேலே, கடவுளைச் சிந்தித்துக் கொண்டு,
அதிசுத்தராய்
நித்திரை செய்து, வைகறையில் எழுந்துவிடல் வேண்டும்.

உபவாச விரத தினத்துக்கு முதற்றினத்திலே ஒரு பொழுது அபாரணத்திலே போசனஞ் செய்தல் வேண்டும்.

உபவாச விரத தினத்துக்கு மற்றை நாட் காலையிலே நித்திய கருமம் இரண்டும் முடித்துக் கொண்டு, மாகேசுர பூசை செய்து, ஆறு நாழிகையுள்ளே சுற்றத்தாரோடு பாரணம் பண்ணல் வேண்டும்.

பாரணம் பண்ணியபின் பகலிலே நித்திரை செய்யாது, சிவபுராணங்களைக் கேட்டுக் கொண்டிருத்தல் வேண்டும்.

  1. தொடங்கிய விரதத்தை இடையே விடுவோரும், விரத பலத்தை அடையார்.

ஜெனனி ஜோதிட மையம்
அஸ்ட்ரோ ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
வாழ்க வளத்துடன்
9444663519

Related Posts