அஸ்ட்ரோ ஜெனனிதயாநிநி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
9444663519
பிரம்மஹத்தி தோஷம்
ஒருவரின் ஜாதகத்தில் குரு மற்றும் சனி கிரகங்கள் சேர்க்கை பெற்றாலும், குருவை சனி எங்கிருந்து பார்த்தாலும், குருவின் சாரத்தில் சனியும், அதே போல சனியின் சாரத்தில் குருவும் இருந்தாலும், குரு மற்றும் சனி கோள்கள் ஒன்றையொன்று பார்த்தாலும் அது பிரம்மஹத்தி தோஷம் உள்ள ஜாதகம் ஆகும்
பிரம்மஹத்தி தோஷமானது ஆண் மற்றும் பெண் இருவருக்கும் ஏற்படும்.
அஸ்ட்ரோ ஜெனனிதயாநிநி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
9444663519
பிரம்மஹத்தி தோஷம் எப்படி ஏற்படுகிறது?
ஒரு உயிரைக் கொள்வதால் இந்த பிரம்மஹத்தி தோஷம் ஏற்படுகிறது.
வெள்ளிக் கிழமைகளில்
நல்ல பாம்பைக் கொன்றாலும் பிரம்மஹத்தி தோஷம் ஏற்படும்.
எந்த பிறவியிலாவது ஆலயத்தை சேதப்படுத்தி இருந்தாலும், அடுத்தவர் வீட்டை அபகரித்து இருந்தாலும் இந்த பிரம்மஹத்தி தோஷமானது ஏற்படும்.
பொன், பொருளுக்கு ஆசைப்பட்டு ஒரு உயிரை கொலை செய்து இருந்தால் இந்த தோஷமானது ஒருவருக்கு ஏற்படும்.
வயதான காலத்தில் பெற்றோர்களை கவனிக்காமல் தனியாக விட்டுவிட்டாலும்
இந்த தோஷம் ஏற்படும்.
இந்த பாவமானது தலைமுறைகளையும் பாதிக்கும்.
அஸ்ட்ரோ ஜெனனிதயாநிநி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
பிரம்மஹத்தி தோஷம் என்ன செய்து விடும்?
பிரம்மஹத்தி தோஷம் உடையவர்களுக்கு வாழ்க்கையில் நிம்மதி
என்பதே இருக்காது.*
நேர்மறை எண்ணங்களை விட தேவையில்லாத எதிர்மறை எண்ணங்கள் அவர்களை மனதை வாட்டி துன்புறுத்தும்.
மேலும் இவர்களுக்கு உரிய வயதில் திருமணம் நடக்காது. அப்படியே நடந்தாலும் திருமண வாழ்வில் நிம்மதி என்பது இருக்காது.
மேலும் சரியான கல்வி, நிம்மதியான வேலை மற்றும் குழந்தைபேறு இவற்றில் பல பிரச்சனைகளை வாழ்வில் சந்திப்பார்கள்.
பொன், பொருள் கையில் தங்காது. கடன் வாங்கித்தான் வாழ்க்கையை தள்ளுவார்கள்.
இவர்களில் ஒரு சிலர் அதிக அளவில் சம்பாதித்தாலும் கையில் பணம் தங்காது.
நல்லறிவு, நல்ல பழக்கங்கள், நல்ல உழைப்பு போன்றவை இருந்தாலும் சமுகத்தில் நல்ல மதிப்பு கிடைப்பது கடினம்.
அஸ்ட்ரோ ஜெனனிதயாநிநி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
பிரம்மஹத்தி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் :
பிரம்மஹத்தி தோஷமானது மனிதர்களை மட்டுமல்ல பல கடவுள் அவதாரங்களையும், முனிவர்களையும், ரிஷிகளையும் பாடாய்படுத்தியுள்ளது என்பதற்கு பல புராணகதைகள் உண்டு.
பைரவர் – பிரம்மனின் தலையை வெட்டியதால் பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது.
சப்தகன்னிகள் – மகிசாசுரன் எனும் அரக்கனை கொன்றதால் இவர்களுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது.
இராமர் – இராவணனைக் கொன்றதால் இராமருக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது.
வீரசேனன், வரகுண பாண்டிய மன்னர்கள் – பிராமணனைக் கொன்றதால் பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது.
அஸ்ட்ரோ ஜெனனிதயாநிநி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
பிரம்மஹத்தி தோஷம் நீக்கும் பரிகாரங்கள்
1. கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் கோவிலுக்குச் சென்று, பிரம்மஹத்தி தோஷ நிவர்த்தி செய்து, ஒரு வாசல் வழியே நுழைந்து மற்றொரு வாசல் வழியே வெளியே வர வேண்டும். அங்கே அதற்குரிய யாகம் நடத்த வேண்டும். இது மிகவும் சிறந்த பரிகாரமாகும்.
2. பிரம்மஹத்தி தோஷத்திற்கு குலதெய்வத்தை முதலில் வணங்கி, பின் ராமேஸ்வரம், காசி, கயா, கங்கை உள்ளிட்ட புண்ணிய ஸ்தலங்களில் நீராடி, இறைவனை வணங்கி வந்தாலும் இந்த தோஷத்தின் கடுமை குறையும்.
3. அமாவாசை தினங்களில் மாலை அருகிலுள்ள சிவன் கோவிலுக்குச் சென்று, ஒன்பது சுற்றுகள் சுற்றி வணங்க வேண்டும். இதுபோல ஒன்பது அமாவாசை தினங்களில் சுற்றி வந்து வணங்கி, சிவனுக்கு மூன்று அகல் விளக்கு ஏற்றி, அர்ச்சனையும், அபிஷேகமும் செய்து வந்தால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்.
4. மிகவும் தொன்மையான சிவன் கோவில்களில் அனைத்து சன்னதிகளிலும் பஞ்சக்கூட்டு எண்ணெய் கொண்டு விளக்கேற்றி வந்தால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் என்பதும் ஐதீகம்.
5. ராமேஸ்வரம் கடலில் நீராடி பின் கோவிலில் அமைந்திருக்கும் அனைத்து தீர்த்தங்களிலும் நீராடி, ஜடாமகுடேஸ்வரர் கோவிலில் உள்ள ஜடாமகுட தீர்த்தத்தில் நீராடி ஜடாமகுடேஸ்வரரை வழிபட்டு வந்தால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்.
6. திருவண்ணாமலை அருகில் வில்வராணி எனும் ஊரில் அமைந்துள்ள சிவசுப்பிரமணிய சுவாமியை வணங்கி வந்தால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்.
உங்களால் முடிந்தவரை இயலாதவர்களுக்கு உதவி செய்துகொண்டே இருக்க வேண்டும். தினம் தோறும் ஒரு பசுமாட்டிற்கு பசுமையான அருகம் புல்லையும், சுத்தமான தண்ணீரையும் வைக்க வேண்டும்.
ஒரே ஒரு முறையாவது, சிவன் கோயிலுக்கு சென்று மனதார வேண்டிக்கொண்டு,* அங்கப்பிரதட்சணம்
செய்தீர்கள் என்றால், பிரம்ம தோஷத்தினால் இருக்கக்கூடிய தாக்கம் கட்டாயம் குறையும் என்று சொல்லப்பட்டுள்ளது.*
சிவன், பிரம்மா, விஷ்ணு மும்மூர்த்திகள் இருக்கக்கூடிய திருத்தலங்களுக்கு அடிக்கடி சென்று வழிபாடு செய்வது தோஷத்திற்கான தாக்கத்தை குறைக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.
அஸ்ட்ரோ ஜெனனிதயாநிநி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க