பிறப்பின் பரம ரகசியம்

ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க

பிறப்பின் பரம ரகசியம்

ஜாதகம் என்பது லக்னத்தை அடிப்படையாகக் கொண்டதாகும்

ராசி என்பது இரண்டே கால் நாளைக்கு ஒன்று வீதம் வரும்

லக்னம் என்பது இரண்டு மணி நேரத்துக்கு ஒன்று வீதம் வரும்

அதுவும் அம்ச லக்னம் 13 நிமிடத்திற்கு ஒன்று வீதம் வரும்.

இன்னும் சொல்லப் போனால் சஷ்டியாம்சம்
லக்னம் என்பது 2 நிமிடத்திற்க் ஒன்று வீதம் ஒரு நாளைக்கு 720 லக்னங்கள் வரும்

ஆகவேதான்
ஒரே ராசியில் பிறந்த எல்லோருடைய வாழ்க்கையும் ஒரே மாதிரி அமைவதில்லை

ஒரே நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கை ஒவ்வொரு விதமாக மாறுபட்டு அமைகிறது

ஒரே லக்னத்தில் ஒரே நட்சரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை முறைக் கூட வேறு பட்டுள்ளது

ஒரு நிமிட பனிரெண்டு நொடி இடைவெளியில் பிறந்த குழந்தைகளின் வாழ்வில் தான் எவ்வளவு எவ்வளவு வித்தியாசம்

கண்ணுக்குத் தெரியாத புழுக்கள் முதல் மனிதன் வரை பிறப்புகள் 84 லட்சம் என்கிறது சாஸ்த்திரம்

ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க

அவை என்னென்ன வடிவம்
குணம்
செயல்பாடுகள்
ஒரே நாளில் எத்தனை எத்தனை விதமான படைப்புகள்

காந்தி
பிறந்த அன்று எத்தனை ஆயிரம் பிறவிகள் நிகழ்ந்திருக்கும்.
அவர்கள் எல்லோருமா மகாத்மா ஆகிவிட்டார்களா

அல்லது
அவரைக் கொன்ற கோட்சே பிறந்த அன்று எவ்வளவு பேர் பிறந்திருப்பார்கள்.

அவர்கள் எல்லோரும் கோட்சே போல கொலையாளி ஆகிவிட்டார்களா

இல்லையே

இதற்கு காரணம்
பிறந்த ஒரு கண நொடி நேரம் தான்

ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க

இதை விளக்குவதற்கு ஒரு அழகான கதை உண்டு.

கேரளத்தில் “சுவாதி திருநாள்” என்ற ஒரு அரசன் இருந்தான்.

அவன் கோயிலுக்குச் சென்று ஆண்டவனை வணங்கி விட்டு வெளியே வந்தபோது

ஒரு பிச்சைக்காரன் அவர் காலை கெட்டியாகப் பற்றிக் கொண்டு கண்ணீர் விட்டு கதறினான்.

“அரசே அங்கேயும் சுவாதி, இங்கேயும் சுவாதி ,அடியேனும் சுவாதி.

அவரோ ஆண்டவனாயிருக்க

நீரோ அரசனாயிருக்க

நானோ ஆண்டியாய் அலைவதேன் அரசே

என கண்ணீர் விட்டான்

அதாவது,

சுவாதி நட்சத்திரத்தில்

ஆண்டவன்
அரசன்
ஆண்டி
என மூவரும் பிறந்துள்ளனர்

அவனுக்கு மட்டும் ஏன் இந்த இழி நிலை என்ற வருத்தம்

அரசனுக்கு அந்த ஆண்டி கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லை

ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க

அவனை
அரண்மனை ஜோதிடரிடம்
கொண்டு வந்து விட்டான்.
விளக்கம் தருமாறு கேட்டான்.

ஜோதிடர் ஒரு நிமிடம் யோசித்தார்.

பின் ஒரு நாணயத்தை எடுத்து உயரே சுண்டி விட்டார்.
அந்த நாணயம் உயரே சென்று பின் கீழே தரையில் வந்து விழுந்தது.
பின் விளக்கினார்.

*”அரசே! இந்த நாணயத்தை நான் சுண்டிய கணத்தில் பிறந்தவன் *ஆண்டவன்.*

அந்த நாணயம் மேலே உயரே போன போது பிறந்தவன் அரசன்.

நாணயம் கீழை விழுந்த போது பிறந்தவன் ஆண்டி.

ஆக,
இந்த ஒரு கண நொடி நேர வித்தியாசத்தில்

ஆண்டவனும் பிறப்பான்
அரசனும் பிறப்பான்
ஆண்டியும் பிறப்பான்.”
என்றார்.

அது அவரவர் ஊழ்வினைப் பயன்

பிரபஞ்சம் வகுத்த காலக்கணக்கு அவ்வளவு சூட்சுமமானது

ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க

Related Posts