மிதுன லக்னமும் கோதண்ட ராகுவும்

மிதுன லக்னமும் கோதண்ட ராகுவும்

மிதுன லக்கினத்திற்கு ராகு முழுமையான யோக கிரகம் ஆகும். ஏன் எனில் மிதுனம், துலாம் மற்றும் கும்பம் ஆகிய திரிகோண ஸ்தானத்தில் ராகுவின் நட்சத்திரங்களான திருவாதிரை, ஸ்வாதி மற்றும் சதயம் நட்சத்திரம் முழுமையாக உள்ளது.

எனவே மிதுன லக்கினத்திற்கு முழு யோகம் செய்யும் கிரகமாக ராகு வருகிறார்.

குருவின் தனுசு வீட்டில் இருக்கும் ராகு *”கோதண்ட ராகு” என்று அழைக்கப்படுவார். மிதுனத்திற்கு ராகு திசை நன்மை செய்யும் அமைப்பில் இருக்கும்.

இருப்பினும் ராகு மிக நல்ல பலன்கள் தருவது எப்போது என்று அனுபவ பூர்வமாக சில குறிப்புகள் உள்ளன.

மேஷம், ரிஷபம், கடகம், கன்னி மற்றும் மகரம் ஆகிய 5 இடங்களில் ராகு பொதுவாக நல்ல பலன்களை தருவார்.

3,6,10,11 ஆம் இடங்களான உப ஜெய ஸ்தானத்தில் இருந்தால் நல்ல பலன்கள் நிச்சயம் தருவார்.
ராகுவுக்கு வீடு கொடுத்த கிரகம் உச்சம் பெற்றால் ராகு கெடுதல்களை தரமாட்டார். நன்மைகள் செய்வார்.
திதி சூன்யம் பெற்ற ராசியில் ராகு இருந்தால் அதிக நன்மைகள் செய்வார்.
இறுதியாக ராகு மிகப்பெரிய நன்மைகள் அளிக்க வேண்டும் என்றால் ராகு குருவின் வீட்டில் சுக்கிரனுடன் இணைந்து குரு பார்வை பெற்று இருக்க வேண்டும் அல்லது சுக்கிரன் வீட்டில் குருவுடன் இணைந்து சுக்கிரனின் பார்வை பெற்று இருக்க வேண்டும்.
இதுவே நடைமுறையில் ராகு நல்ல பலன்கள் தரும் அமைப்பு.