ஜெனனி ஜோதிட மையம்
அஸ்ட்ரோ ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க னன
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
வாழ்க வளத்துடன்🙏
9444663519
ஸ்பீட் ரேஸ்பைக் ஓட்டும் அன்பு உடண்பிறப்புக்கு
இந்த கடிதம் உன் கையில் கிடைக்கும் போது நீ உயிரோடு இருப்பாய் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு
இல்லை என்றால் சில வேளைகளில் வைத்தியசாலை கட்டிலில் கூட படுத்து கொண்டிருக்கலாம்
பைக் ஓட்டுவது ஒன்றும் சாகசம் கிடையாது
நீயாக ஒன்றும் செய்ய தேவையில்லை. முறுக்க முறுக்க அதுவாக ஓடும்
முன்னே வருவது மாடா ஆடா, காரா பைக்கா, ஆளடிச்சானா, இல்லை மனிதனா என்பது கூட உன் பைக்குக்கு தெரியாது
சில வேளை எமனாகவோ கூட இருக்கலாம்
யாருக்கு தெரியும்
அது போல தன் மேல் ஏறி இருப்பதும் எருமையா இல்லை கட்டிளம் பையனா என்பது கூட அதற்கு தெரியாது. பைக் டிசைன் அப்படி
நீ வேகமாக ஓட்டுவதால் ஒன்றும் ஆகிவிடப் போவதில்லை என்பதை புரிந்து கொள்ள இன்னும் சில வருடங்கள் உனக்கு எடுக்கலாம்
ஆனால், அதற்கு முதலே, சில வேளை ஒரு ஆக்சிடன்ட் உன் உயிரை பறித்து விடலாம்
அல்லது நிரந்தர நோயாளியாக மாற்றி விடலாம்.
பிரபஞ்சம் உன்னை காப்பானாக. சில வேளை மயிரிழையில் உயிர் தப்புதல் உனக்கு ஒரு பாடமாக அமையலாம்
ஆனால் ஒன்று மட்டும் உண்மை
அது சில வேளைகளில் உனக்கு தெரியாமல் இருக்கலாம்
நீ வேகமாக ஓட்டும் ஒவ்வொரு நொடியும் யாரோ ஒருவர் உன்னை சபித்துக் கொண்டேயிருக்கிறார்கள்
உனக்கு முன்னே குழந்தையோடு வரும் ஒரு தாய், வீதியை கடக்க காத்துக் கொண்டிருக்கும் ஒரு பாடசாலை மாணவன், ஓரமாக தன் பாட்டிற்கு சைக்கிள் ஓட்டிக் கொண்டிருக்கும் ஒரு முதியவர், இப்படி யாரோ ஒருவர் உனது வேகத்தை கண்டு அஞ்சி எப்போ சாவானோ வண்டிலதான் இவனுக்கு சாவு என்று திட்டிக் கொண்டிருப்பது உனக்கு தெரியுமா?
உனது வேகத்தை கண்டு பயந்து போய், காய் கறி வாங்க மார்க்கட் கூட போக முடியாமல் எத்தனையோ பெரியவர்கள் வீட்டிலே இருந்து உன்னை நினைத்து புழுங்கிக் கொண்டிருப்பது உனக்குத் தெரியுமா?
இவை எல்லாவற்றையும் விட, ஒரு நாள் நீ ஆக்சிடனட் பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும் போது, உனது தாய், தந்தை, சகோதர, சகோதரிகள் படும் பாடும் கஷ்டமும் உனக்கு தெரிய வாய்ப்பில்லை
ஏனெனில் நீ அப்போது ஐஸியுலே உயிருக்காக போராடிக் கொண்டிருப்பாய்.
உன்னை காப்பாற்றுவதற்காக வேண்டி, ஒரு வருடமாக ஒபரேசனுக்கு காத்திருக்கும் ஒருவருக்கு நாளை காலை வழங்கப்பட வைத்திருந்த இரத்தத்தை எடுத்து பாவிக்கப்பட வேண்டி வரும்
அப்போது இரத்தம் இல்லாமல் கஷ்டப்படும் அந்த நோயாளியின் மனக் குமுறலை நீ அறிய மாட்டாய்
சில வேளைகளில், நீ உயிர் பிழைத்தாலும் அந்த சாபம் உன்னை சும்மா விடாது
ஆக்சிடனட் உனது தலைக்குள்ளே ஏற்பட்ட இரத்தக் கசிவை சரி செய்ய உன்னை வேறு ஒரு ஆஸ்பத்திரிக்கு மாற்றுவதற்கு ஆம்புலன்ஸ் பயன்பட்டதால்
அப்போது தான் ஹாட் அட்டக் வந்த உனது ஊர் பாடசாலை அதிபரை சிகிச்சைகளுக்காக கொண்டு செல்ல அம்புலன்ஸ் இல்லாமல் அவர் இறந்த போன பாவம் உன்னை வந்தடைந்து கொண்டிருப்பது கூட உனக்கு தெரிய வாய்ப்பில்லை
ஒரு தாயின் மகனின் மூளையில் உள்ள கட்டியை இன்று வெட்டி எடுத்துவிடுவார்கள், இரண்டு வருடங்களாக நான் பட்ட கஷ்டங்கள் எல்லாம் அதனோடு சரியாகிவிடும்” என்று சந்தோஷத்துடன் இருக்கும் தாய், ‘அவசரமாக ஒரு ஆக்ஸிடனட் கேஸ் உங்க புள்ளட ஒப்பரேஷன நாளைக்கு தான் செய்யலாம்’ எனும் போது என்ன பாடு படும் என்பது உனக்கு தெரிய வாய்ப்பில்லை.
அவர் உனக்கு சபிப்பதை தவிர வேறு எதுவும் உனக்காக செய்வார் என்று எப்படி எதிர்பார்ப்பது?
இப்படி ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கின்றன
அவைகள் எல்லாவற்றையும் எழுதி உனது நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.
ஆனால் ஒன்று மட்டும் உண்மை.
அவை எல்லாமே உனக்கு சாபத்தையும் பாவத்தையும் கொண்டுவந்து சேர்ப்பனவாகவே இருக்கின்றன.
இவைகள் தெரியாமல் தான் முறுக்கு, முறுக்கு என்று முறுக்கி கொண்டு நீ ஓட்டிகொண்டு ஓடுகிறாய்.
கொஞ்சம் நிதானித்து நின்று பார். நீ அப்படி ஓடி ஓடி என்ன சாதித்திருக்கிறாய் என்று கொஞ்சம் நிதானமாக யோசித்து பார். ஒன்றுமேயில்லை
ஜெனனி ஜோதிட மையம்
அஸ்ட்ரோ ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
வாழ்க வளத்துடன்🙏
9444663519
ஆனால், இப்படி உன்னைப் போலவே வேகமாக ஓட்டி அவர்கள் மூலம் கால் கை உடைந்தவர்கள்
இடுப்புக்கு கீழே வேலை செய்யாமல் போனவர்கள்
கட்டிலோடு கிடந்து சலம் கழிப்பவர்கள், எழுந்து நடக்க முடியாதவர்கள்
என்று பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
உனது ஊரிலேயே உனது வீட்டிற்கு பக்கத்திலேயே அப்படி ஒருவர் நிச்சயமாக இருப்பார்
இனி பைக்கை தொடுவதற்கு முதல், கொஞ்சம், அவர்களில் ஒருவரை, நீ கட்டாயம் போய்ப் பார்க்க வேண்டும்
அவர்கள் படும் கடும் கஷ்டங்களை தெரிந்து கொள்ள வேண்டும்
அப்போது தான் உன் முறுக்கேறிய உடலுக்கு கஷ்டம் எது என்று தெரிய வரும்
அடுத்த முறை பைக்கிலே ஏறி உட்காரும் போது இந்த பதிவை மனதில் நினைத்துக் கொள்
கொஞ்சம் மெதுவாக ஓட்டிப் பார்
உலகம் எவ்வளவு அழகாக இருக்கிறது
மக்கள் உன்னோடு எவ்வளவு அன்பாக இருக்கிறார்கள்
என்பது, உனக்கு அப்போது தான் தெரிய வரும்
ஜெனனி ஜோதிட மையம்
அஸ்ட்ரோ ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
வாழ்க வளத்துடன்🙏
9444663519